வெள்ளி, 10 ஜனவரி, 2025

பல்கலைகளின் துணைவேந்தர் நியமனம்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------
2025 யுஜிசி நகல் விதிகளின்படி பல்கலைகளின் 
துணைவேந்தர்கள் பின்வருமாறு தெரிவு 
செய்யப் படுவர்.

1) மூன்று வல்லுநர்கள்கொண்ட ஒரு தேடல் குழுவை 
பல்கலைகளின் வேந்தர் (ஆளுநர்) நியமிப்பார்.
அ) வேந்தர் நியமிக்கும் ஓர் உறுப்பினர் தேடல் 
குழுவின் தலைவராக இருப்பார்.

2) யுஜிசி ஓர் உறுப்பினரை நியமிக்கும்.

3) சம்பந்தப்பட்ட பல்கலையின் செனட் அல்லது 
சிண்டிகேட் ஓர் உறுப்பினரை நியமிக்கும்.

இவ்வாறு அமைக்கப்பட்ட மூவர் கொண்ட 
தேடல் குழு துணைவேந்தரைத் தெரிவு செய்யும்.
    

துணைவேந்தருக்கான தகுதிகள்!
-----------------------------------------------------
அ) உயர் கல்விநிறுவனங்களில் 10 ஆண்டுகள் 
பேராசிரியராகப் பணி  புரிந்தவர்கள். 
ஆ) சிறந்த ஆய்வுக்கூடங்களில் முதுநிலை 
மட்டத்தில் பணிபுரிந்தவர்கள். 
இ) தொழில்துறை, பொது நிர்வாகம், பொதுத்
திட்டமிடல், பொதுத்துறை நிறுவனங்கள் 
ஆகியவற்றில் முதுநிலை மட்டத்தில் 
தலைசிறந்த கல்வியியல் பங்களிப்பைகச் 
செய்தவர்கள். இவர்களில் மிகச்சிறந்த தகுதி 
உடையவர் நுணைவேந்தராகும் அருகதை 
உடையவர்கள்.

கல்வித்துறையைச் சேர்ந்தவரை மட்டுமே 
துணைவேந்தராக ஆக்குவது என்ற பழைய 
நடைமுறை மாற்றத்துக்கு உள்ளாகிறது.

தனியார் துறையிலோ பொதுத்துறையிலோ உயர் 
கல்வித் தகுதியுடன் கூடிய சிறந்த நிபுணர்கள் 
துணைவேந்தராக முடியும்.

புரிந்து கொள்ள வசதியாக சில உதாரணங்களைச்  
சொல்கிறேன்.
உதாரணம்-1. நந்தன் நிலக்கேணி 
-----------------------------------------------------
இன்போசிஸில் பணியாற்றியவர் நந்தன் நிலக்கேணி.
அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இவரை 
அழித்து வந்து ஆதார் அட்டைகளை உருவாக்கும் 
பொறுப்பைக் கொடுத்தார். நந்தன் நிலக்கேணி 
ஒரு மாபெரும் சாதனையாளர். இவரை ஒரு 
பல்கலையில் துணைவேந்தராக நியமிப்பதில் 
என்ன தவறு காண முடியும்?

உதாரணம்-2; ரகுராம் ராஜன்.
---------------------------------------------
பொருளாதார நிபுணரும் ரிசர்வ் வங்கி ஆளுநருமான 
ரகுராம் ராஜனை ஏதாவது ஒரு பல்கலையின்
துணைவேந்தராக நியமிப்பதில் என்ன தவறு?

உதாரணம்-3. மகேஷ் ஜெத்மலானி.
------------------------------------------------------
தேசிய சட்டப் பல்கலைகள் இந்தியாவில் 
25 இருக்கின்றன. ராம் ஜெத்மலானியின் மகன் 
மகேஷ் ஜெத்மலானியை (அவர் கட்சி 
சார்பற்றவராக இருக்கும் பட்சத்தில்)   
துணைவேந்தராக ஆக்குவதில் 
என்ன தவறு?

இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்ல 
முடியும்.இன்போசிஸ் நாராயண மூர்த்தியையோ 
அல்லது சாம் பித்ரோடாவையோ பல்கலைத் 
துணை வேந்தராக நியமிப்பதில் என்ன கேடு 
விளைந்து விடும்?

1950களில் 1960 களில்  என்ன நிலையோ அதே 
நிலை மாற்றமின்றி நீடிக்க வேண்டும் என்று 
எதிர்பார்ப்பது அறிவியலுக்கு எதிரானது. 

1960-1970களில் தமிழ்கற்றவர்களே துணை
வேந்தர்களாக நியமிக்கப் பட்டனர். மதுரைப்  
பல்கலையில் தெ பொ மீ, டாக்டர் மு வ, 
அண்ணாமலை பல்கலையில் டாக்டர் 
வ சுப மாணிக்கனார் என்று தமிழாசிரியர்கள்
துணைவேந்தர்களாகப் பொறுப்பேற்றனர்.

இன்று நந்தன் நிலக்கேணியோ, மகேஷ் 
ஜெத்மலானியோ துணைவேந்தராக ஆவது  
தெபொமீ. முவ காலத்தை விட மிகப் பன்மடங்கு 
முன்னேற்றத்தைக் காட்டும்.

Opposition for the sake of opposition என்பது 
முட்டாள்தனமானது.
***********************************************  

   
    


  
    
  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக