வியாழன், 4 ஆகஸ்ட், 2016

அதிமுகவின் அடையாள எதிர்ப்பு
அர்த்தமற்ற எதிர்ப்பே!
மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு!
------------------------------------------------------------------------------
மாநிலங்களவையில் GST மசோதா நிறைவேறி விட்டது.
மாநிலங்களவை என்பது அறிஞர்களின் அவை
என்று கருதப் படுகிறது.

டாக்டர் மன்மோகன் சிங், ப சிதம்பரம், அருண் ஜேட்லி,
கபில் சிபல், சீதாராம் யெச்சூரி போன்ற அறிஞர்கள்
அங்கு உண்டுதான்.

வாக்கெடுப்பு நடக்கும்போது மார்க்சிஸ்ட் பொதுச்
செயலர் சீதாராம் யெச்சூரி மசோதாவை ஆதரித்து
வாக்களித்தார். CPI கட்சியின் டி ராஜா ஆதரித்து
வாக்களித்தார். இது ஓர் சாதாரண மசோதா அல்ல
என்பதையும் இது அரசமைப்புச் சட்டத்தின் 122ஆவது
திருத்த மசோதா என்பதையும் எமது முந்திய பதிவில்
யாம் சொல்லி இருக்கிறோம்.

வாக்கெடுப்பின்போது அவையில் இருந்த பாஜக, காங்,
மார்க்சிஸ்ட், CPI, CPM. திமுக உள்ளிட்ட கட்சிகள்
ஆதரித்து வாக்களித்தன. மொத்தம் அவையில் இருந்த
203 பெரும் ஆதரித்து வாக்களித்தனர். 

மசோதாவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்ட அதிமுக
வாக்கெடுப்பின்போது அவையில் இருந்து மசோதாவை
எதிர்த்து வாக்களித்து வரலாற்றில் இடம்
பெற்றிருக்கலாம். ஆனால் அதிமுக அதைச்
செய்யவில்லை. மசோதா எதிர்ப்பில்லாமல் நிறைவேற
வசதியாக, வாக்கெடுப்புக்கு முன்னரே வெளிநடப்புச்
செய்தது அதிமுக. அதிமுகவுக்கு மாநிலங்களவையில்
12 பேர் (சசிகலா புஷ்பா நீங்கலாக) இருந்தனர்.
திமுகவின் உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே (கனிமொழி,
திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி).

தனித்தமிழ்நாடு, மாநில உரிமைகள் இவையெல்லாம்
காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன,

இந்தியாவில் பொருளாதாரக் கொள்கை உள்ள
கட்சிகள் மூன்றுதான்.
1) காங்கிரஸ் 2) பாஜக 3) கம்யூனிஸ்ட் கட்சிகள்
(CPI,CPM). மற்ற எந்தக் கட்சிக்கும் பொருளாதாரக்
கொள்கையே கிடையாது. அவையெல்லாம் அடையாள
அரசியல் கட்சிகளே. சாதி, மதம், இனம், மொழி,
சிறுபான்மை, தலித் என்ற அடையாளங்களைத்
தாண்டி, இவை சிந்திப்பதே கிடையாது.

கொள்கையுள்ள கட்சிகள் மூன்றில், காங்கிரசும்
பாஜகவும் ஆளும் வர்க்கக் கட்சிகள். ஏகாதிபத்திய
சார்புக் கட்சிகள். நாங்கள் அப்படி இல்லை என்று
கூறிக் கொள்ளும் CPI, CPM கட்சிகள் இந்த GST
மசோதாவை ஆதரித்து வாக்களித்ததன்
மர்மம் என்ன?

இந்த மசோதாவை எப்படியும் நிறைவேற்றி விட
வேண்டும் என்று படு தீவிரமான கார்ப்பொரேட்
லாபி செயல்பட்டது. அவர்களிடம் விலை
போனார்கள் இந்தக் கம்யூனிஸ்டுகள். இதுதான்
உண்மை.

இல்லை, அப்படியெல்லாம் இல்லை என்று
இந்தக் கம்யூனிஸ்டுகள் கூறினால், GST மசோதாவின்
அளப்பரிய நன்மைகள் குறித்து தீக்கதிரிலும்
ஜனசக்தியிலும் கட்டுரை எழுதத்  தயாரா?
பதிலை எதிர்பார்க்கிறோம்.
*************************************************************** 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக