ஜி.எஸ்.டி மசோதா ஏன் மாநில சட்ட மன்றங்களிலும்
நிறைவேற வேண்டும்?
-----------------------------------------------------------------------------------------------
அரசமைப்புச் சட்டத்தின் இதற்கு முந்திய பல்வேறு
திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
நிறைவேறியதுமே குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு
அனுப்பப்பட்டு சட்டமாகி விட்டன. இதை அண்மைக்
கால வரலாற்றில் நிறையப் பார்த்து இருக்கிறோம்.
ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (GST)
குறைந்தது 15 மாநிலங்களில் நிறைவேறினால்தான்
சட்டமாகும்; ஏன்?
ஜி.எஸ்.டி மசோதா அரசமைப்புச் சட்டத்தின் 122ஆவது
திருத்த மசோதா. இது அரசமைப்புக் சட்டத்தில் உள்ள
ஏழாவது அட்டவணையில் திருத்தம் செய்கிறது.
நம் அரசமைப்புச் சட்டத்தில் ஒரு டஜன் அட்டவணைகள்
(schedules) உள்ளன. அண்ணல் அம்பேத்கார் இதை
எழுதியபோது ஒரு டஜன் அட்டவணைகள் இல்லை.
காலப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக
அட்டவணைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போய் தற்போது 12 அட்டவணைகள் உள்ளன.
இதில் எட்டாவது அட்டவணை மிகவும் புகழ் பெற்றது.
அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் இந்த எட்டாவது
அட்டவணை மொழிகளைப் பற்றியது. இதில்
தற்போது 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன.
ஏழாவது அட்டவணை எதை பற்றிக் கூறுகிறது?
மத்திய மாநில அரசுகளின் அதிகாரம் பற்றியும்,
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உரிய துறைகள்
பற்றியும், இருவருக்கும் பொதுவான துறைகள்
பற்றியும் (union list, state list, concurrent list) கூறுவது
ஏழாவது அட்டவணை ஆகும்.
ஜி.எஸ்.டி மசோதாவானது இந்த ஏழாவது அட்டவணையில்
திருத்தம் செய்ய முனைகிறது. இதில் மாநிலங்களும்
சம்பந்தப் பட்டிருப்பதால், இந்தத் திருத்தத்திற்கு மாநில
அரசுகளும் ஒப்புதல் கொடுத்தாக வேண்டும்.
அதாவது மொத்தமுள்ள இந்தியாவின் 29 மாநிலங்களில்,
குறைந்தது பாதி மாநிலங்கள், அதாவது 15 மாநிலங்களின்
சட்ட மன்றங்களில் இந்த ஜி.எஸ்.டி மசோதா
நிறைவேறியாக வேண்டும். அதுவும் மூன்றில் இரண்டு
பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியாக வேண்டும்.
என்றாலும் இது கடினமானதல்ல. எதிர்க்கட்சியான
காங்கிரசும் பல்வேறு மாநிலக் கட்சிகளும்,
மார்க்சிஸ்ட் கட்சியும் இதை ஆதரிப்பதால்
15 மாநிலங்களில் இது நிறைவேறுவது எளிதே,
***************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக