ஆதரவு எதிர்ப்பு இரண்டையும் தீர்மானிப்பது
கார்ப்பொரேட்களின் பணமே!
அடையாள அரசியல் கயவர்களின்
எதிர்ப்பின் ரகசியம்!
-----------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்

இந்திய நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான
மசோதாக்களோ அரசமைப்புச் சட்டத் திருத்தங்களோ
வரும்போது என்ன நடக்கிறது? தங்களின் நலம் பேணும்
மசோதாக்கள் நிறைவேற வேண்டும் என்பதில்
கார்ப்பொரேட் நிறுவனங்கள் கடும் அக்கறை
காட்டுகின்றன. பல்வேறு சிறிய கட்சிகளுக்கும்
அவற்றின் தலைமைக்கும் கார்ப்பொரேட்கள் பணம்
கொடுத்து கட்சிகளின் ஆதரவைப் பெறுகிறார்கள்.
இதற்கு எம்மால் ஆயிரம் உதாரணங்களைக் கூறி
நிரூபிக்க முடியும். இதை மறுத்து நாங்கள் கூறுவது
பொய் என்று எவராவது நிரூபிக்க முடியுமா என்று
பகிரங்க சவால் விடுகிறோம்.
Cash for query scam நடந்த நாடு இது. அதாவது
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு எம்.பி.க்கள்
காசு வாங்கிய நாடு இது.
டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, அணுசக்தி
ஒப்பந்தம் (123 ஒப்பந்தம்) வாக்கெடுப்புக்கு
விடப்பட்ட போது, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி
கட்சி, பணம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தத்தை
ஆதரித்தது. இதற்கு முன் நின்று ஏற்பாடு செய்து
முலாயமிற்கு பணம் வாங்கி கொடுத்தவர் அமர்சிங்.
இதுபோலவே, தற்போது ஜி.எஸ்.டி மசோதாவை
நிறைவேற்றுவதற்கு, கார்ப்பொரேட்கள் பணம்
பட்டுவாடா பண்ணினார்கள். பல கட்சிகள்,
குறிப்பாக அடையாள அரசியல் கட்சிகள்,
கார்ப்பொரேட்களிடம் கோடிக்கணக்கில் பணம்
வாங்கிக் கொண்டு, ஜி.எஸ்.டி மசோதாவை ஆதரித்து
வாக்களித்தார்கள்.
இவ்வாறு பணம் வாங்கிய கட்சிகளில் மார்க்சிஸ்ட்கள்
உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் உண்டு என்று
அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள்.
இன்றுவரை மார்க்சிஸ்டுகள் இதை மறுக்கவில்லை.
சமூகநீதிக் காவலர் லாலு பிரசாத் யாதவ், இன்னொரு
சமூகநீதிக் காவலர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட
பல்வேறு தலைவர்கள் கார்ப்பொரேட்களிடம் பணம்
வாங்கிக் கொண்டு ஜி.எஸ்.டி. மசோதாவை ஆதரித்து
சமூகநீதியை நிலைநாட்டினார்கள்.
கேவலத்திலும் கேவலமான கொத்தடிமைக் கட்சியான
அதிமுகவின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி.
மசோதாவை எதிர்த்தபோது, திருத்தங்களைக் கொடுத்தபோது, வாக்கெடுப்பில் பங்கு பெறாமல் வெளிநடந்தபோது, மார்க்சிஸ்ட் யெச்சுரிகள்,
இந்த மசோதாவை ஆதரித்தன் உள்மர்மம் என்ன?
கார்ப்பொரேட்களிடம் பணம் வாங்கிக் கொண்டு,
ஜி.எஸ்.டி.யை ஆதரித்து மக்களிடம் அம்பலப் பட்டுப்
போன அடையாள அரசியல் கயவர்கள், தாங்கள்
மோடியின் எடுபிடிகள் என்று உருவான சித்திரத்தை
மறைக்க, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில்
வீரியம் காட்டுவது போல் நடிக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையின் பிரதான அம்சமான,
வெளிநாட்டுப் பல்கலைகளின் நுழைவு குறித்து
அடக்கி வாசிக்கும் இந்தக் கயவர்கள், இல்லாத
சமஸ்கிருதத் திணிப்பை எதிர்ப்பதாகக் கூறிக்
கொண்டு சமஸ்கிருதப் பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையை இவர்கள் அந்தரங்க
சுத்தியோடு எதிர்க்கவில்லை என்பது நிரூபிக்கப்
பட்டிருக்கிறது.
*********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக