மார்க்சிய ரெட்டியார்களும் ரெட்டியார் மார்க்சிசமும்!
--------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------------------------------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) அகில இந்திய
மாநாடு அண்மையில் பாண்டிச்சேரியில் இனிதே நடந்து
முடிவுற்றது. எனினும் தமிழ்நாட்டில் இந்த மாநாடு
எந்த அசைவையோ அதிர்வையோ தாக்கத்தையோ
ஏற்படுத்தவில்லை. மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
**
மாநாட்டில் திரு சுதாகர் ரெட்டி அவர்கள் மீண்டும்
பொதுச்செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
**
கம்யூனிசம் (அல்லது மார்க்சிசம்) சாதிக்கு எதிரானது
என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் CPI கட்சி
அப்படி நினைக்கவில்லை போலும்! கட்சியின் பொதுச்
செயலாளர் சுதாகர் ரெட்டி அவர்கள், தம் பெயரில்
உள்ள "ரெட்டி" என்ற சாதிப்பெயரைத் துறக்கவில்லையே!
**
தமிழ்நாட்டில் எல்லோரும் சாதியைத் தங்கள் பெயரோடு
சேர்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இது அக்காலத்தில்
இயல்பானதாக இருந்தது. 1925இல் சுயமரியாதை
இயக்கத்தைத் தொடங்கினார் பெரியார். செங்கல்பட்டு
மாநாட்டில் தம் பெயரோடு ஒட்டிக் கொண்டு இருந்த
நாயக்கர் பட்டத்தைத் துறந்தார்.
**
மறைந்த தோழர் சுந்தரையா மார்க்சிஸ்ட் கட்சியின்
பொதுச் செயலாளராக இருந்தவர். தெலுங்கானா
விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தை வழி
நடத்தியவர். இவரது ஒரிஜினல் பெயர் "சுந்தர ராம ரெட்டி".
ரெட்டி என்ற சாதிப் பட்டத்தைத் துறந்து, சுந்தரய்யா
என்று பெயரை மாற்றிக் கொண்டவர்.
**
தந்தை பெரியார், சுந்தரய்யா போல, பெருவாரியான
தலைவர்கள் தங்கள் பெயரோடு ஒட்டி இருந்த சாதியை
நீக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட்களில்
இன்னொரு உதாரணம் தோழர் ஏ.எஸ்.கே. தமது
ஐயங்கார் பட்டத்தைத் துறந்தவர்.
**
CPI பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியார் அவர்கள்
தமது சாதிப் பட்டத்தைத் துறக்கவில்லையே! ஏன்?
ஒருவேளை சாதி நல்லது என்கிறாரோ ரெட்டியார்வாள்!
**
சுதாகர் ரெட்டியார் மார்க்சைப் பின்பற்றுகிறாரா அல்லது
ஜி கருப்பய்யா மூப்பனாரைப் பின்பற்றுகிறாரா?
இவர் மார்க்சிய ரெட்டியாரா அல்லது இவர் போதிப்பது
ரெட்டியார் மார்க்சிசமா?
**
சொல்லுங்கள் CPI விசுவாசிகளே! சாதியப் பித்தர்களே!
***************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக