ஏமன் மீது போர் தொடுக்கும் சவூதி அரேபியா!
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------------------------------
1) ஏமன் என்று ஒரு குட்டி நாடு; மக்கள் தொகை
இரண்டரைக் கோடி மட்டுமே. மலைகள் நிரம்பிய நாடு இது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் அரேபியாவின் தெற்கில்
உள்ளது. வாசகர்கள் MAPஐப் பார்ப்பது நல்லது.
2) சவூதி அரேபியா இந்த நாட்டின் மீது போர் தொடுத்து
உள்ளது. சவுதியின் நூறு போர் விமானங்கள் சனா
விமான தளத்தில் குண்டுமழை பொழிந்தன. பலர்
உயிரிழந்தனர்; பலர் காயம்.
**
3) ஏமனின் அதிபராக இருந்த ஹடி (Hadi) பதவியில்
இருந்து விரட்டப் பட்டார். ஷியா பிரிவு அல் ஹௌதி
(Al Houthi) கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராகத்தான் சவூதி விமானத்
தாக்குதலைத் தொடங்கி உள்ளது.
4) சவுதியுடன் UAE, பஹ்ரைன், மொராக்கோ, ஜோர்டான்,
சூடான், எகிப்து உள்ளிட்ட பத்து நாடுகள் இணைந்து
தங்களின் போர் விமானங்களை இத்தாக்குதலில்
ஈடுபட்டுள்ளன.
**
5) பாக்கிஸ்தானும் சவுதிக்கு ஆதரவாக விமானங்களை
அனுப்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
6) இரான் மட்டுமே சவுதியின் இப்போர் வெறியை வன்மையாகக்
கண்டித்து உள்ளது. இரான் ஷியா முஸ்லிம்களின் நாடு.
**
7) இஸ்லாமின் தாயகம், முஹம்மது நபியின் தாயகம்
என்ற போதிலும், சவூதி அரேபியா அமெரிக்காவின்
அடிவருடி நாடாக, கொத்தடிமை நாடாகவே இருந்து
வருகிறது. சவூதி அரேபிய மன்னர்கள் (மன்னராட்சிதான்)
அமெரிக்க அதிகாரிகள் காலால் இட்ட வேலையைத்
தங்கள் தலையால் செய்வார்கள், அதுவும் இஸ்லாமின்
பெயரால் செய்வார்கள்.
**
8) இது மற்றுமொரு சன்னி-ஷியா போர்தான்.
9) தனியொரு நாட்டில் சோஷலிசம்... சோஷலிசத்தை
விடுங்கள்; தேசிய இன விடுதலை சாத்தியமா?
இந்தப் போர் இந்தக் கேள்வியை முன் வைக்கிறது.
விடை தேடுவோம்.
**********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக