done (6) பின்நவீனத்துவம் ஓர் எளிய அறிமுகம்!
-----------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------
டாக்டர் ராமதாஸ் பின்நவீனத்துவச் செயல்பாட்டாளர்!!!
---------------------------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் இரண்டாம் உலகப் போருக்குப்பின்
தோன்றிய தத்துவம். எனினும், காலத்தால் முற்பட்ட
நீட்ஷே என்னும் தத்துவஞானியின் கோட்பாடுகளின்
சாயலையும் இதில் காணலாம். பிரதானமாக
மார்க்சிய எதிர்ப்பு என்பது பின்நவீனத்துவத்தின் தத்துவ
அடையாளமாக இருக்கிறது.
**
பொருளாதாரம் என்பது அடிக்கட்டுமானம் என்றும்
அரசியல், பண்பாடு, இலக்கியம் ஆகிய பலவும்
பொருளாதாரம் என்ற அடித்தளத்தின் மீது கட்டப்
பட்ட மேல்கட்டுமானம்தான் என்றும் போதிக்கிறது மார்க்சியம்.
பின்நவீனத்துவ அறிஞர் மிஷேல் ஃபூக்கோ
இதை மறுக்கிறார். சகலத்துக்கும் அடித்தளம் "அதிகாரம்"
தான் என்கிறார். ஆதிகாலத்தில் இருந்தே மனிதன்
அதிகாரத்தைப் பெறுவது என்ற ஏக சிந்தையுடன்
இருந்து வந்தான், இருக்கிறான் என்கிறார்.
அதிகாரத்தைக் களைய வேண்டும் என்கிறார்.
**
இக்கட்டுரை ஓர் எளிய அறிமுகம் மட்டுமே தருகிற
கட்டுரை ஆதலால், பின்நவீனத்துவம் பற்றிய
திறனாய்வுக்கு இங்கு இடமில்லை. அதைத் தனியாகப்
பார்க்கலாம்.
**
ஃபூக்கோ, பார்த், அல்தூசர் என்றெல்லாம் ஒவ்வொரு
அறிஞரின் கோட்பாடுகளைக்கூறி விளக்க முற்படுவது
சலிப்புத் தரலாம். ஏனெனில், இடதுசாரி முகாமைத் தவிர
வேறு இயக்கங்களின் அணிகள் இது குறித்து அறிய
ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, கோட்பாட்டு
விளக்கங்களைத் தள்ளி வைத்து விட்டு, நடைமுறை
வாயிலாக, பின்நவீனத்துவம் பற்றிப் பார்ப்போம்.
**
பின்நவீனத்துவம் பெற்றெடுத்த பிள்ளைதான் பாட்டாளி
மக்கள் கட்சி என்று சொன்னால் வாசகர்கள் அதிர்ச்சி
அடையலாம். ஆனால் அதுதான் உண்மை.
பாமக ஒரு சாதிக் கட்சி, FEUDAL PARTY, அதைப்போய்
எப்படி POST MODERN கட்சி என்று கூறலாம் என்று வாசகர்கள்
கோபிக்கலாம்.
**
டாக்டர் ராமதாஸ் அல்தூசரையும் ஃ பூக்கோவையும்
படித்து விட்டுத்தான் கட்சி ஆரம்பித்தாரா என்று வாசகர்கள்
கேட்கலாம். அவர் அவற்றைப் படிக்கவில்லை என்பது
உண்மையே. அதேபோல், திமுக, அதிமுக கட்சிகள் எல்லாம்
பின்நவீனத்துவத்தை எதிர்க்கும் கட்சிகளா என்றும்
கேள்விகள் பிறக்கலாம். இதற்கெல்லாம் தெளிவான
விடை காண, தமிழக அரசியல் அரங்கில்
பின்நவீனத்துவத்தின் செயல்பாடுகள் என்னென்ன என்று
அறிந்து கொள்வது முக்கியம்.
**
திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கும்
பின்நவீனத்துவம் என்ற தத்துவத்துக்கும் ஸ்நானப் பிராப்தி
கிடையாது. இருந்து இருந்தால், அண்ணாயிசம் என்பதற்குக்
கோட்பாட்டு விளக்கம் அளித்த எம்.ஜி.ஆர், கேப்பிடலிசம்,
கம்யூனிசம், போஸ்ட்மாடர்னிசம் ஆகிய தத்துவங்களில்
இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து அண்ணாயிசத்தை
உருவாக்கினேன் என்று சொல்லி இருப்பார். எம்.ஜி.ஆருக்கு
கட்சி நடத்தச் சொல்லிக் கொடுத்த வலது கம்யூனிஸ்ட்
தலைவர் கல்யாண சுந்தரத்துக்கே பின்நவீனத்துவம்
என்றால் என்ன என்று தெரியாது.
**
திராவிட இயக்கத் தலைவர்களில் பின்நவீனத்துவம்
பற்றி அறிந்து வைத்து இருப்பவர் கனிமொழி அவர்கள்
மட்டுமே.
----------------------------------------------------------------------------------
தொடரும்
********************************************************************88

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக