தீஸ்தா; குஷ்ட ரோகியின் கையில் உள்ள வெண்ணெய்!
---------------------------------------------------------------------------------------------
தீஸ்தா, கேஜ்ரிவால் இருவரின் ஏகாதிபத்தியச் சார்பு
வெட்ட வெளிச்சமான ஒன்று. அவர்கள் நடத்தும் NGO
அமைப்புகள் அதை நிரூபிக்கின்றன. ஆனால், டாக்டர்
சுப்பிரமணியன் சுவாமி, இவர்களைப் போல், NGO அமைப்பு
எதையும் நடத்தவில்லை. இதனாலேயே டாக்டர் சுவாமி
தேச பக்தர் என்று கருத இயலாது. இஸ்ரேலிய மொசாத்
அமைப்புடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு உண்டு.
ஆனாலும் இது நிரூபிக்கப் படவில்லை.எது எப்படி
இருப்பினும் டாக்டர் சுவாமி ஏகாதிபத்திய எடுபிடியே.
**
ஏகாதிபத்தியத்திடம் நேரடியாகப் பணம் பெற்று,
"சமூகசேவை" செய்யும் தீஸ்தா, கேஜ்ரிவால் ஆகிய
இருவரும் ஏகாதிபத்திய எடுபிடிகளே. அதுபோல,
பணம் பெறாவிட்டாலும் டாக்டர் சுவாமியும் ஏகாதிபத்திய
எடுபிடியே. எடுபிடிகள் ஒரே புள்ளியில் இருந்து
தோன்றியவர்கள். எனவே அவர்கள் ஒரே புள்ளியில்
சங்கமிப்பது இயல்பானதே. இதில் வியப்பதற்கு
ஒன்றும் இல்லை.
**
ஏகாதிபத்திய எடுபிடிகள் கூட்டத்தில் இருந்து,
தீஸ்தாவை மட்டும் தனியாகப் பிரித்து, சலுகை
கொடுத்து, அவரைப் புரட்சியாளராக ஞானஸ்நானம்
செய்வது பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.
தீஸ்தாவைப் புரட்சியாளராகக் கருதினால், அதே
அளவுகோல் படி, கேஜ்ரிவாலையும், டாக்டர் சுவாமியையும்
புரட்சியாளர்களாகக் கருத வேண்டிய அபத்தம் நேரும்.
**
தீஸ்தா முற்றிலுமாக சட்டவாதத்தில் மூழ்கியவர்.
மக்களைத் திரட்டித் தெருவில் இறங்கிப் போராடுபவர்
அல்லர். அவரின் கவனம் முழுவதும் அவரின் ப்ராஜக்ட்களில்
மட்டுமே இருக்கும். ஒவ்வொரு ப்ராஜக்ட்டும் பணம் காய்ச்சி
மரம்! அவர் நடத்தும் COMBAT COMMUNALISM பத்திரிகையும்
ஒரு ப்ராஜக்ட் தான்.
**
பின்-கோத்ரா வன்முறையைத் தொடர்ந்து மோடியின் பெயர்
கெட்டுப் போனது. அமெரிக்காவுக்கும் மோடிக்கும் ஊடல்
ஏற்பட்டது. இதனால் மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்தது.
இதன் மூலம் அமெரிக்கா ஜனநாயக வேடம் தரித்தது.
அந்தக் காலக் கட்டத்தில், மோடி எதிர்ப்புச் செயல்பாடுகளுக்கு,
தீஸ்தாவின் எஜமானன் அமெரிக்கா ஊக்கம் அளித்தது.
இது 2002-2014 காலக் கட்டம். இக்காலத்தில் தீஸ்தா கொடி
கட்டிப் பறந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியம் அவருக்கு
எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. மாறாக
ஊக்குவித்தது.
**
பின்னர் மோடி வெற்றி பெற்றார். இந்தியப் பிரதமர் ஆனார்.
மோடிக்கு விசா மறுத்த அமெரிக்கா, மோடியைக்
கொண்டாடத் தொடங்கியது. மோடி அமெரிக்கா சென்றார்.
ஏகாதிபத்தியம் அவரை வரவேற்றது. மோடியை அமெரிக்கா
தன்னுடைய விசுவாசியாக ஏற்றுக் கொண்டது.
**
இவ்வாறு (2014க்குப் பின்) நிலைமை மாறிவிட்டது.அமெரிக்கா,
மோடி எதிர்ப்பு நிலையில் இருந்து, மோடி ஆதரவு நிலைக்கு
மாறி விட்டது. இதனால் தீஸ்தாவின் பாடு திண்டாட்டம்
ஆகி விட்டது. எனவே தீஸ்தா தற்காலிக நெருக்கடியைச்
சந்திக்கிறார். தீஸ்தா நெருக்கடியில் இருக்கிறாரே
என்று எவரும் கண்ணீர் சிந்த வேண்டியது இல்லை.
இந்த தற்காலிக நெருக்கடியில் இருந்து அவரை அவரின்
எஜமானன் அமெரிக்கா விடுவிக்கும். மற்றவர்கள்
எதுவும் செய்ய வேண்டியது இல்லை.
**
ஏகாதிபத்திய ஏஜன்ட் தீஸ்தாவின் சிலுவையை நாம்
சுமக்க வேண்டியது இல்லை. அது அமெரிக்காக் காரனின்
வேலை.
**
தீஸ்தா போன்ற ஏகாதிபத்திய எடுபிடிகள் குஷ்டரோகியின்
கையில் உள்ள வெண்ணெய் போன்றவர்கள். இந்த
வெண்ணெயை எடுத்துத் தின்ன முடியாது. தின்னவும் கூடாது.
******************************************888888

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக