புதன், 4 மார்ச், 2015

மாட்டு இறைச்சி விவகாரம்
ஆர்.எஸ்.எஸ்.சின் கரங்களையே வலுப்படுத்தும்!
---------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
----------------------------------------------------------------------------------
1) மாட்டு இறைச்சி விவகாரம் ஒரு தேசிய விவாதமாக
குட்டி முதலாளித்துவ அரைவேக்காடுகளால்
முன்னெடுக்கப் பட்டு வருகிறது.
2) இது நாட்டு மக்களை மீண்டும் மீண்டும் அடையாள அரசியல்
படுகுழியில் தள்ளும் ஆர்.எஸ்.எஸ் அறிஞர்களின்
சதித்திட்டமே.
---------------------------------------------------------------------------------------------
3) பாஜக அரசின் நாசகார பொருளாதாரக் கொள்கையும்
அது உடனடியாகவும் நீண்ட கால அளவிலும் ஏற்படுத்த
இருக்கும் தாக்கமும் குறித்து எந்த விவாதமும் நடந்து
விடாமல், மக்களின் சிந்தனையைத் திசை திருப்பவே
மாட்டிறைச்சி விவகாரம் கையில் எடுக்கப் படுகிறது.
4) மாட்டிறைச்சி விவாதங்களின் இறுதியில், பெறப்படும்
  முடிவுகள் பாஜகவுக்கே வலு சேர்க்கும்.
--------------------------------------------------------------------------------------
5) இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், பசுவதைத்
தடை குறித்த சட்டம் வெவ்வேறுபட்ட அளவுகளில் ஏற்கனவே
இருக்கிறது.
6) இறைச்சி உண்பதையே உணவுப் பழக்கமாகக் கொண்ட
வெளிநாடுகளில்கூட, பசுவதைத் தடைச் சட்டம் நடைமுறையில்
உள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------
7) கம்யூனிஸ்ட் நாடான கியூபா, பசுவதையைத் தடை செய்துள்ளது.
8) இசுலாமிய நாடான இரானில் மாட்டிறைச்சி விற்பனை
தடை செய்யப் பட்டுள்ளது.
9) இந்தியாவில் மொகலாய மன்னர்கள் ( பாபர் முதல் அக்பர் வரை)
காலத்தில் பசுக்கொலை தடை செய்யப்பட்டு இருந்தது.
10) சமண புத்த மதங்களும் திருக்குறளும் பசுவதையை 
மட்டுமின்றி, புலால் உண்ணுவதையே ஏற்கவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------    
11)அண்ணல் அம்பேத்கர் இயற்றிய, இந்திய அரசமைப்புச்
சட்டத்தின் திசைகாட்டும் கோட்பாடுகளில் ( DIRECTIVE 
PRINCIPLES) பசுவதைத்தடை, அடையவேண்டிய ஒரு 
லட்சியமாகக் கூறப்பட்டு உள்ளது.
12) கியூபாவில் பசுவதைத் தடைச் சட்டத்தைக்  கொண்டு வந்த 
பிடெல் காஸ்ட்ரோவும், கியூபாவின் இன்றைய அதிபர் ரவுல் 
காஸ்ட்ரோவும் ஆர்.எஸ்.எஸ்.சின் கைக்கூலிகளா?
----------------------------------------------------------------------------------------------
13) விவசாயிகளின் ஒப்புதலைப் பெறாமலே, நிலங்களைக் கையகப் 
படுத்தலாம் என்ற மோடி அரசின் சட்ட முயற்சிகளைப் பற்றி
எவ்வளவு விவாதம் இந்த நாட்டில் நடந்துள்ளது?
14) விரலுக்குத் தக்க வீக்கம் என்றவாறு, பிரச்சினைக்குத் 
தகுந்த அளவிலான விவாதம் நடைபெறாமல், பசுவதைத்தடை 
ஊதிப் பெருக்கப் படுவது ஏன்? இதனால் யாருக்கு லாபம்?
------------------------------------------------------------------------------------------------------
15) செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை யானும் கெடும்.
-------------------------------------------------------------------------------------------------- 
*********************************************************************88
   

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக