சனி, 7 மார்ச், 2015

ஒரு வாதமும் அதன் வெறுமையும்!
இசக்கிமுத்து அண்ணாச்சி கருத்து!
-------------------------------------------------------------
நிர்பயா ஆவணப் படத்தை அரசு தடை செய்துள்ளது.
இதுபோன்று, அரசு எப்போதெல்லாம் தடை விதிக்கிறதோ,
அப்போதெல்லாம் ஒரு வாதம் வழக்கமாக முன்வைக்கப் 
படுகிறது. குட்டி முதலாளித்துவ அரை வேக்காடுகளின் 
சிந்தனைக் கழிவான அந்த வாதம் இதுதான்.
----------------------------------------------------------------------------------------- 
"அரசு தடை செய்தால் என்ன? அதை இணையதளத்திலும் 
YOU TUBEஇலும் பார்த்து விடலாமே! அதனால் தடைவிதித்து  
என்ன பயன்?" என்னும் கு.மு.வாதிகளின் இந்த வாதம் சாரமற்றது.
-----------------------------------------------------------------------------------------------
அரசால் ஒருபோதும் வெளியிடுவதற்கு அனுமதிக்கப் படாத,
நீலப்படங்கள் (blue films) இணையதளத்தில் இலவசமாகக் 
கிடைக்கின்றன.இவற்றைக் குட்டி முதலாளித்துவவாதிகள் 
எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதற்காக, அரசு தடை 
செய்யாமல் இருக்குமா?
-------------------------------------------------------------------------------------------
அரசு தடை செய்த கஞ்சாவும் அபினும் வெளிச்சந்தையில் 
கிடைக்கின்றன என்பதாலேயே, அரசு கஞ்சாவைத் தடை 
செய்யக் கூடாது என்கிற கு.மு.வாதிகளின் வாதம் 
கூமுட்டைத் தனமானது என்கிறார் இசக்கி முத்து அண்ணாச்சி!
-------------------------------------------------------------------------------------------------      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக