செவ்வாய், 31 மார்ச், 2015

(4) பின்நவீனத்துவம் ஓர் எளிய அறிமுகம்!
----------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------
இலக்கு உள்ள மார்க்சியமும் 
இலக்கு எதுவும் இல்லாத பின்நவீனத்துவமும்!
------------------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் மார்க்சியத்துடன் சமர் புரிந்தது. 
எனினும் அது மார்க்சியத்தை வெற்றி கண்டுவிடவில்லை;
வென்று விடவும் முடியாது.
ஏனெனில், அமைப்பு, அமைப்பாக்கம் ஆகிய கருத்தாக்கங்கள் 
பின்நவீனத்துவத்தில் இல்லை.
**"அமைப்பு கூடாது" , "மக்களை அமைப்பாக்கக் கூடாது"
என்பன பின்நவீனத்துவத்தின் அடிப்படைகள்.
மேலும் பின்நவீனத்துவம் மார்க்சியத்தை அகற்றிவிட்டு 
(REPLACE ) தான் அவ்விடத்தில் அமர வந்த தத்துவம் அல்ல. 
உலகை மாற்றி அமைப்பதுதான் தனது இலக்கு என்று 
மார்க்சியம் பிரகடனம் செய்கிறது. ஆனால், 
பின்நவீனத்துவத்துக்கு அப்படி எந்த இலக்கும் கிடையாது.
**
பின்நவீனத்துவம் மக்களைத் திரட்டி 
அமைப்பாக்கி இருக்குமேயானால் ,
கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போன்று, உலகெங்கும் 
பின்நவீனத்துவக் கட்சிகள் தோன்றி இருக்கும்.
ஆனால் அமைப்பே கூடாது என்ற கோட்பாடு காரணமாக 
பின்நவீனத்துவம் வேறு எந்தத் தத்துவத்தின் இருப்புக்கும்
அச்சுறுத்தலாக இல்லை.
**
கடந்த 50, 60 ஆண்டுகளாக, தத்துவ அரங்கில், 
இருத்தலியல் (EXISTENTIALSIM )முதலாக 
பின்நவீனத்துவம் ஈறாக கணக்கின்றி வந்த தத்துவங்கள் 
யாவும் மார்க்சியத்தை அகற்றி விடவில்லை.
********************************************************88888888

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக