சனி, 28 மார்ச், 2015

ஈஸ்வரன் அவர்களுக்கு,
நீங்கள் கூறுவது அனைத்தும் உங்களின் அகநிலைக்
கருத்து (SUBJECTIVE THINKING). இது கலைஞர் எழுதும்
ராமானுஜர் என்னும் இலக்கியப் படைப்புப் பற்றிய கட்டுரை.
இது திமுகவின் அரசியல் பற்றிய விமர்சனக் கட்டுரை அல்ல.
மார்க்சின் மூலதனம் நூல் அரசியல் படைப்பு. சேக்ஸ்பியரின்
மாக்பெத் ஒரு இலக்கியப் படைப்பு. மூலதனத்தை அளக்கும்
அளவுகோல் வேறு; மாக்பெத்தை அளக்கும் அளவுகோல் வேறு.
**
கலைஞரின் இலக்கியப் பணியை அங்கீகரிக்க மறுக்கும்
பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் ஜெயமோகனின் கருத்தையே
நீங்களும் வழிமொழிகிறீர்கள். ராமானுஜர் பற்றி கலைஞர்
எழுதுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அதில் ஏதாவது
கலைஞர் தவறு செய்தால், வாருங்கள் கலைஞரைக் கைது
செய்து சிறையில் அடைப்போம். அப்போதாவது உங்கள்
வன்மம் அடங்குமா என்று பார்ப்போம்.
***
மீண்டும் கேட்கிறேன், ராமானுஜரைப் பற்றிக் கலைஞர்
எழுதுவதில் உங்களுக்கு எங்கே வலிக்கிறது என்று
தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
----------------------------------------------------------------------
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக