செவ்வாய், 31 மார்ச், 2015

(3) பின் நவீனத்துவம் ஓர் எளிய அறிமுகம்!
-------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------
DIFFERENTIATION AND INTEGRATION!
--------------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் தமிழ்ச் சூழலில் முதன் முதலில் 
இலக்கியத்தில்தான் அறிமுகம் ஆனது. அது நிறையச் 
"சொல்லாடல்"களைத் தமிழில் இறக்கியது. அதுவரை 
இருந்த "சொல்லாட்சி"போய் "சொல்லாடல்" வந்தது.
பேரரசியல்-நுண்ணரசியல், மையம்-விளிம்பு, என்று 
நிறையக் கருத்தாக்கங்களும் அவற்றைக் குறிக்கும் 
புதிய சொற்களும், மன்னிக்கவும், சொல்லாடல்களும் 
தமிழில் இறங்கின. இவற்றை எல்லாம் விவரிப்பது 
எளிய அறிமுகம் என்பதைத் தாண்டியது.
**
பேரரசியல்-நுண்ணரசியல் பற்றிமட்டும் பார்ப்போம்.
முதலாளிய வர்க்கம் ஆள்கிறது. தொழிலாளி, விவசாயி 
ஆகிய வர்க்கங்களைத் திரட்டி, மார்க்சியம் முதலாளிகளை 
எதிர்க்கிறது. இங்கு மார்க்சியம் செய்வது வர்க்க அரசியல்.
அதாவது இது பேரரசியல்.
**
பின்நவீனத்துவம் நுண்ணரசியல் மட்டுமே செய்யும்.
பேரரசியல் செய்யாது. ஒரு எளிய உதாரணம் பார்ப்போம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் எண்பது சதவீதம் 
பேர் பிற்பட்ட வகுப்பினரே (உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 
இடஒதுக்கீடு கிடையாது என்ற போதிலும்) என்று அண்மையில் 
நீதியரசர் சந்துரு அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
இருப்பினும், உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு 
வேண்டும் என்று சில வழக்கறிஞர் அமைப்புகள் போராட்டம் 
நடத்தின.
**
இதில்  நியாயம் இல்லையே என்ற விமர்சனங்கள் 
எழுந்தபோது, வழக்கறிஞர் அமைப்புகள் பின்வருமாறு 
விளக்கம் அளித்தனர்; "இதுவரை நீதிபதி பதவி கிடைக்கப் பெறாத சாதியினருக்காக நாங்கள் போராடுகிறோம்" என்றனர். 
(WE FIGHT FOR THE CASTES WHO ARE UNREPRESENTED SO FAR). 
அதாவது, பொற்கொல்லர் சமூகத்தில் இருந்து இதுவரை 
ஒருவர்கூட உயர்நீதிமன்ற நீதிபதி ஆகவில்லை என்றால், 
அச் சமூகத்துக்கு இடம் கேட்பது. 
இதுதான் fighting for the unrepresented என்பது.
**
மேற்கூறிய வழக்கறிஞர்களின் போராட்டம், நுண்ணரசியல் 
செயல்பாட்டுக்கு சரியான உதாரணம் ஆகும். (இக்கட்டுரை 
நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு பற்றியது அல்ல.)
**
ஆக, மார்க்சியம் பேரரசியல் செய்யும்.
பின்நவீனத்துவம் நுண்ணரசியல் செய்யும்.
கால்குலஸ் மொழியில் கூறுவதானால்,
மார்க்சியம் INTEGRATE செய்யும்.
பின்நவீனத்துவம் DIFFERENTIATE செய்யும்.
MARXISM IS A PHILOSOPHY OF INTEGRATION!
POST MODERNISM IS A PHILOSOPHY OF DIFFERENTIATION!!
------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
*************************************************************8                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக