சனி, 14 மார்ச், 2015

எனது எதிர்வினை!
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------
1) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து மாநில மாணவர்களையும் 
திரட்டி, ஈழச் சிக்கலுக்காக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியதே, அது போல 
மகஇக ஏன் நடத்தவில்லை என்கிறார் கட்டுரையாளர் அதிஅசுரன்.
மகஇக தமிழ்நாட்டில் மட்டுமே உள்ள ஓர் அமைப்பு. CPI குறைந்ததுபத்து மாநிலங்களில் அமைப்பு பலம் உள்ள அகில இந்தியக் கட்சி. எனவே,
CPI போல, மகஇக டில்லியில் ஆர்ப்பாட்டம் எப்படி நடத்த இயலும்?
குருடனைப் போய் ராசமுழி முழிக்கச் சொல்வதா?
--------------------------------------------------------------------------------------------------------
2) ஈழச் சிக்கலுக்காக, பீகாரில் ஜார்க்கண்டில் சட்டிஸ்கரில் 
ஆந்திராவில் மகஇக வினர் ஏதேனும் ஒரு ஆர்ப்பாட்டம் 
நடத்தினார்களா?
இல்லை, இல்லவே இல்லை! மகஇக என்பது தமிழ்நாட்டில் 
மட்டுமே உள்ள ஒரு சிறிய அமைப்பு. இவர்கள் எங்கிருந்து 
ஜார்க்கண்டில் போய் ஆர்ப்பாட்டம் நடத்த முடியும்?
-------------------------------------------------------------------------------------------
3) கட்டுரையாளர் மகஇகவை மிகை மதிப்பீடு செய்கிறார்.
மண்புழுவை மலைப்பாம்பாகக் காண்கிறார். இதற்குக் 
காரணம், கட்டுரையாளர் ஆள்மாறாட்டச் சிக்கலினால்
அவதிப் படுகிறார். ஜார்க்கன்ட் சட்டிஸ்கர் உள்ளிட்ட 
பல்வேறு மாநிலங்களில், உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட 
மாவட்டங்களில், ஆயுதப் போராட்டம் நடத்தும் 
மாவோயிஸ்ட் கட்சிக்கும் (CPI MAOIST), தமிழ்நாட்டில் 
பிரச்சார இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் மகஇகவுக்கும் 
வேறுபாடு தெரியாமல், பிறழ் புரிதலுக்கு இரையாகி உள்ளார்.
ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தும் மாவோயிஸ்ட்கள் 
ஈழ விடுதலையை முற்றாக ஆதரிக்கிறார்கள் என்பதைக் 
கட்டுரையாளர் உணர்ந்து கொள்ளவும்.
-------------------------------------------------------------------------------------------
திரு வே மதிமாறன் போன்ற குட்டி முதலாளித்துவ 
மேனாமினுக்கி பரபரப்புச் செயல்பாடுகளில் மூழ்கித் 
திளைப்பவர்களை, புரட்சியாளர்கள் விமர்சனம் 
செய்வதில்லை, அதற்கான "அழுத்தும் அவசியம்"
(PRESSING NEED) இருந்தால் அல்லாமல்.
----------------------------------------------------------------------------------   
என்னதான் இருந்தாலும் பெரியார் தி.க போன்ற 
அமைப்புகள் பாசிச ஜெயலலிதாவை ஆதரித்துத் 
தேர்தல் பரப்புரை செய்ததும், இலை மலர்ந்தால் ஈழம் 
மலரும் என்ற அழுகல் தத்துவத்தை மக்களிடம் விநியோகித்ததும் 
மன்னிக்க முடியாத குற்றங்கள். ஜெயலலிதாவை 
ஆதரித்தது ராஜபக்சேவை ஆதரித்ததற்குச் சமம்.
மன்னிக்கவே முடியாது. சுயவிமர்சனம் செய்து கொண்டு 
அடுத்த கட்டப் பணிகளை முன்னெடுக்கலாம். 
------------------------------------------------------------------------------------------              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக