புதன், 11 மார்ச், 2015

புரட்சியின் எல்லை எது?
தமிழக ஆம் ஆத்மி கட்சி வரையறுப்பு!
-----------------------------------------------------------------
ஊழல் ஒழிப்பு குறித்து மொத்த இந்தியாவின் 
கவனத்தையும் ஈர்த்தது ஆம் ஆத்மி கட்சி.
ஒவ்வொரு மாநிலத்திலும், ஊழலை விசாரித்துத் 
தண்டிக்கும் லோக்பால் அமைப்பு வேண்டும் என்று 
உரக்கக் குரல் கொடுத்தது இக்கட்சி.
-----------------------------------------------------------------------
ஆனால் தமிழகத்தில் மட்டும் கனத்த மௌனம் 
காத்தது ஆம் ஆத்மி தலைமை. தமிழக ஆம் ஆத்மி 
பொறுப்பாளர் கிறிஸ்டினா அம்மையாரே இதற்கு 
முழுப் பொறுப்பு. இவர் கூடங்குளம் உதயகுமாரின் 
சொல்படி நடப்பவர்.
----------------------------------------------------------------------------------
தமிழகத்தில் லோக்பால் அமைப்பு வேண்டும் என்று 
குரல் கொடுப்பதையோ போராட்டம் நடப்பதையோ  
திரு உதயகுமார் துளியும் விரும்பவில்லை. ஏனெனில்,
இத்தகைய போராட்டம் ஜெயலலிதாவை முகம் சுளிக்க 
வைத்துவிடும் என்பதுதான்.
--------------------------------------------------------------------------------------------
ஈரேழு பதினாலு லோகங்களும் அழிந்தால்கூட,
ஜெயலலிதாவின் மனம் கோணி விடக்கூடாது 
என்பதுதான் உதயகுமாரின் கோட்பாடு. எனவே,
உதயகுமார் வகுத்த "புரட்சி"யின் எல்லைக்குள் 
நின்றுகொண்டு மட்டுமே ஊழல் ஒழிப்பு பற்றிப் 
பேச முடியும் என்பதால், தமிழக ஆம் ஆத்மி 
லோக்பால் பற்றி வாயே திறக்கவில்லை.
----------------------------------------------------------------------------------
காந்தியவாதி சசிப்பெருமாள் எனப்படும் ஒற்றை 
மனிதர், தமிழகத்தில் லோக்பால் அமைக்க வேண்டும் 
என்று உண்ணாவிரதம் நடத்தினார். ஒரு ஒற்றை 
மனிதர் செய்ததைக் கூட, தமிழக ஆம் ஆத்மி 
செய்யவில்லை. காரணம் உதயகுமார் வரையறுத்த 
புரட்சியின் எல்லைகள்.
-------------------------------------------------------------------------------------
"As long as we enjoy the pleasure of Jeyalalithaa, we are safe" என்பதுதான் 
உதயகுமார், கிறிஸ்டினா ஆகியோர் பின்பற்றிய "மகிழ்ச்சிக் 
கோட்பாடு"(pleasure of doctrine). இதை உடைத்தெறியாமல்
தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி ஒரு நானோ மீட்டர் அளவுகூட 
வளர முடியாது.
------------------------------------------------------------------------------------------------       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக