ஜெயலலிதாவிடம் அடகு வைத்தால் போலிக் கம்யூனிஸ்ட்!
தீஸ்தாவிடம் அடகு வைத்தால் புரட்சியாளனா?
---------------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------------------------------------------
விண்ணுலகில் இருந்து இறங்கி வந்த ஒரு புரட்சிகர(!!)
தேவதை அண்மையில் சென்னைக்கு வந்தார். ராமன்
காலடி பட்டு அகலிகை புனிதம் அடைந்தது போல,
பிற்போக்குச் சென்னை நகரம் இந்த தேவதையின்
வருகையால் புனிதம் அடைந்தது. யார் இந்த தேவதை?
அவர்தான் புனித "தீஸ்தா செதல்வாத்" அவர் வந்து
குதித்த அந்த சுபயோக சுபதினம் 20.03.2015.
**
மஹாளய அமாவாசை வருகிறது என்று வருவதற்கு
முந்தியே நினைவு படுத்தும் சவுண்டிப் பார்ப்பான்களைப்
போல, "தீஸ்தா வருகிறார்" என்று பார்ப்பன ஞானி
சங்கரன் போன்ற முற்போக்குப் பூசாரிகள் உடுக்கு
அடித்துக் கொண்டே இருந்தனர். என்ன ஆச்சரியம்!
ஞானியின் பிருஷ்டத்துக்குப் பின்னால், சிவப்புச் சட்டை
அணிந்திருக்கும் புரட்சிகரச் சவுண்டிகள், ஒரு சின்ன
வரிசையில், சற்றே வெட்கத்துடன்!
**
அமாவாசை மாதந்தோறும் வருவது. ஆனால் மஹாளய
அமாவாசை அப்படி அன்று. இது குறித்துத் தெரிந்து
கொள்ள விரும்புவோர் தயவு செய்து சங்கர மடப்
பார்ப்பான்களை அணுக வேண்டாம்; புரட்சிகரப்
பார்ப்பான்களை அணுகவும்.
**
யார் இந்த புனித தீஸ்தா? இவர் பெரும் பூர்ஷ்வா வர்க்கத்தைச்
சேர்ந்த மேட்டுக்குடிச் சீமாட்டி. இந்தியாவின் முதல்
அட்டார்னி ஜெனரல் ஆக இருந்தவரும், இந்திய சட்ட
ஆணையத்தின் முதல் தலைவருமான எம்.சி.செதல்வாத்
அவர்களின் வாரிசு. மேட்டுக்குடிப் பெண்ணியவாதி.
**
தீஸ்தா ஒரு ஏகாதிபத்திய எடுபிடி. இவர் அந்நிய நாட்டுக்
கைக்கூலி. தொண்டு நிறுவன (NGO) அரசியல் நடத்தி
மக்களை ஏய்க்கும் ஏகாதிபத்திய ஏஜன்ட். Citizens for justice and
peace"என்று ஒரு அரசுசாரா நிறுவனத்தை(NGO), ஏகாதிபத்திய
நிதியைப் பெற்று நடத்தி வருபவர். NGO அமைப்புகளுக்கான
நிதியானது CIAவின் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப் படுவது
என்ற உண்மை தெரிந்தவர்களுக்கு புனித தீஸ்தாவின்
'புரட்சி'யின் சூட்சுமம் புரியும்.
**
பின்-கோத்ரா வன்முறைகள் கோபமுற்ற இந்துக்கள்
தன்னெழுச்சியாக நிகழ்த்தியவை அல்ல என்றும் அவை
நரேந்திர மோடியின் அரசு திட்டமிட்டு நடத்தியவை என்றும்
தீஸ்தா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தண்டனை
பெற்ற ஜெயலலிதாவுக்குப் பிணை வழங்கியது தவறு என்றும்,
ஜெயலலிதா வழக்கை, சந்தேகத்துக்குரிய நடத்தை
கொண்ட தலைமை நீதிபதி தத்து விசாரிக்கக் கூடாது
என்றும் டிராபிக் ராமசாமி உச்ச நீதி மன்றத்தில் மனு
அளித்தார்.
**
தீஸ்தா, ராமசாமி ஆகியோரின் செயல்பாடுகள் இந்த அளவுக்கு
(to this extent) ஏற்கத்தக்கவை. அவ்வளவே. இதற்காக
மார்க்சிய லெனினியத்தை இவர்களிடம் அடகு வைக்க
முடியாது. மார்க்சியப் பிரயோகம் என்பது சட்டவாதம் அல்ல.
ஜெயலலிதாவிடம் மார்க்சியத்தை அடகு வைக்கும்
தா.பாண்டியனும் ஜி.ராமகிருஷ்ணனும் போலிகள் என்றால்,
தீஸ்தாவிடம் அடகு வைப்பவர்கள் புரட்சியாளர்கள்
ஆகி விடுவார்களா?
**
தொழுநோயாளிகளைத் தொட்டுக் குளிப்பாட்டும் தெரசா
அம்மையார் சி.ஐ.ஏ.வின் கைக்கூலி என்று கூரை ஏறிக்
கூவுகிறோம். ரமான் மக்சேசே விருது பெற்ற அரவிந்த்
கேஜ்ரிவால் NGO ஆசாமி, ஏகாதிபத்தியக் கைக்கூலி என்று
கூவுகிறோம் இந்தக் கூவல்கள் உண்மையே.
இதே அளவுகோலால்தான் தீஸ்தாவை அளக்க முடியும்.
தெரசா, தீஸ்தா, கேஜ்ரிவால் ஆகிய இம்மூவர் மட்டுமல்ல,
டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி உட்பட இந்நால்வரும்
ஏகாதிபத்திய எடுபிடிகளே. இவர்கள் அனைவரும் ஒரு
புள்ளியில் சங்கமிக்கக் கூடியவர்களே.
**
தீஸ்தாவின் காலை நக்கிப் பிழைப்பதும் சுப்பிரமணியன்
சுவாமியின் காலை நக்கிப் பிழைப்பதும் சமமானவையே.
**
மேற்கூறிய கருத்துக்களைத் தாண்டி, இக்கட்டுரை ஒரு
முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. NGO அமைப்புகளை
மார்க்சிஸ்டுகள் எதிர்கொள்வது எப்படி என்பதே அந்தக்
கேள்வி. நம் கண் முன்னால், தொண்டு நிறுவனங்களை
ஏற்றுக் கொண்டு அழிந்து போன வினோத் மிஸ்ராவின்
கட்சி (CPI ML LIBERATION) விசுவரூபம் எடுத்து நிற்கிறது.
தொண்டு நிறுவனங்களை ஏற்றுக் கொள்ளாமல், இந்தியாவில்
புரட்சி நடத்த முடியாது என்று சொல்பவர்கள் அந்த
'உண்மை'யை உரத்து முழங்கட்டும்.
**
தங்கள் நிலைபாடுகளை மறைத்துக் கொண்டு, போலி
வேடம் போடும் சந்தர்ப்பவாதிகளால், நெடுங்காலத்துக்கு
உண்மையை மறைக்க முடியாது.
---------------------------------------------------------------------------------------------
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
***********************************************************8888

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக