செவ்வாய், 17 மார்ச், 2015

(1) இக்கட்டுரையில் எவ்வித ஏளனமும் இல்லை. ஒளிவு மறைவின்றி
வெளிப்படையாக இக்கட்டுரை சில உண்மைகளை, அனுபவங்களை
முன் வைக்கிறது. அங்கதச் சுவையுடன் (satirical tone) இக்கட்டுரை
எழுதப் படவில்லை.
(2) அன்றைய காலக்கட்டத்தில் வகுப்பு எடுத்த அனைவரையும் குறிக்கும்.
போலிகளிடம் நேர்மை இருக்காது. ஆனால் புரட்சிகர அணிகளிடம்
நேர்மைக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், இங்கு விவகாரம்
நேர்மை அல்ல. வகுப்பு எடுக்கும் முழுநேர ஊழியருக்கே அன்று
பல தகவல்கள் கிடைத்திருக்கவில்லை; அதற்கான வாய்ப்பு இல்லை.
(3) அடிப்படை  மார்க்சியத்தில்(basic) பிரச்சினை இல்லை. ஆனால்,
சமகால நிகழ்வுகள் பற்றி, உதாரணமாக, நிக்சனின் சீன விஜயம்
பற்றி, லின் பியாவோ பற்றி, வியட்நாம் அமெரிக்க உறவு பற்றி ...
இத்தியாதி விஷயங்கள் எல்லாம் சமகால நிகழ்வுகள். இதில்
தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு தோழர்
வகுப்பு எடுத்திருப்பார். சரியான தகவல்கள் சில ஆண்டுகள்
கழிந்த பின்னரே கிடைக்கும். அதுவரை பூர்ஷ்வா PRESS என்ன
சொல்கிறதோ, அதுதான் வேதம். ஏனெனில் அவற்றைச் சரிபார்க்க
வகுப்பு எடுக்கும் தோழருக்கும் சரி, நமக்கும் சரி, எந்த
வாய்ப்பும் கிடையாது.
இதுதான் கட்டுரையில் யாப்புறுத்தப் பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக