செவ்வாய், 31 மார்ச், 2015

வீரமணி-பாண்டே வினாடி வினா நிகழ்ச்சி!
நிகர விளைவு என்ன?
---------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
------------------------------------------------------------------------------
எண்பத்தி இரண்டு வயதும் தளர்ந்த உடல்நிலையும் கொண்ட 
ஆசிரியர் அவர்கள், வினாடிவினாப் போட்டி மாதிரி 
பாண்டே கேள்வி கேட்கும்போது, ஐந்து  வினாடிகளுக்குள் பதில் 
அளிக்க முடியுமா?
**
ஒரு கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வி,
அதை உள்வாங்கும் முன்னர் அடுத்த கேள்வி என்று 
அஸ்திரங்களால் வரிசை கட்டும் பாண்டே, நிதானத்துடன் 
கேள்வி கேட்டுப் பதில்களைப் பெற்று இருக்க வேண்டும்.
அந்த பதில்களில் பழுது இருப்பின், ஆசிரியரை அம்பலப் 
படுத்தலாம்.
**
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விட்டார் பாண்டே.
திறந்த மனதுடன் கூடிய ஒரு நேர்மையான உரையாடல் 
இன்று தமிழ்ச் சூழலில் சாத்தியமில்லை என்பதை 
இந்நிகழ்வு புலப்படுத்துகிறது.
**
கேள்விகளால் துளைத்து உண்மையை வெளிக் கொணர்வது 
ஒரு ANCHORஇன் கடமை. அதே நேரத்தில், நிகழ்ச்சியைக் 
காணும் நேயர்களுக்கும் நேர்காணல் வழங்கும் தலைவருக்கும் 
இடையில் ஒரு நடுவராகவும் இருக்க வேண்டியதும்  
ANCHORஇன் கடமை. ஆனால் அன்றைய நிகழ்வில் ஒரு 
எள்முனையேனும் நடுவராக இருக்கவில்லை திரு பாண்டே.
**
எனவே ஓர் ஊடகவியலாளர், ANCHOR என்ற முறையில் 
பாண்டே தோல்வி அடைகிறார். பாண்டே நடத்திய 
வினாடி வினா நிகழ்ச்சி ஒரு பாரபட்சமான விளையாட்டு,
அதாவது, IT IS A GAME AT ODDS!
**
GAME AT ODDS என்பது சதுரங்கத்தில் வருவது. எனவே அதைத்  
தவிர்த்து விட்டுச் சொல்கிறேன். கிரிக்கட் விளையாட்டில்,
ஒரு அணியில் பதினோரு பேரும், இன்னொரு அணியில் 
பத்து பேரும் என்று வைத்துக் கொண்டு விளையாடினால்,
அது GAME AT ODDS எனப்படும்.இப்படிப் புரிந்து கொள்ளுங்கள்.  
அழுகுணி ஆட்டம் என்று புரிந்து கொள்ளுங்களேன்.
**
கூட்டிக் கழித்துப் பார்த்தால், இதன் நிகர விளைவு (net effect)
ஆசிரியரின் மீது பரிவை ஏற்படுத்தி இருக்கிறது.
Yes, everybody's sympathy lies with Aaasiriyar K Veeramani.
**************************************************************888     
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக