(6) சூத்திர பக்தர்களுக்கு நாமம் தரிக்க உரிமையில்லை!
சாதி வெறியர்களை எதிர்த்துப் போராடிமுறியடித்து,
கோவில் நுழைவு உள்ளிட்ட வழிபாட்டு உரிமைகளைப்
பெற்றுத் தந்த ராமானுஜர் பற்றி கலைஞர்!
------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
--------------------------------------------------------------------------------------------
ராமானுஜர் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர். அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்,
அக்காலத் தமிழ்ச் சூழலைப் பற்றிப் புரிந்து கொள்வது
அவசியம் ஆகிறது. ராமானுஜர் காலத்தில் தத்துவ அரங்கில்
ஆதி சங்கரரின் அத்வைதம் செல்வாக்குச் செலுத்தியது.
ராமானுஜர் இதற்கு மாற்றாக, விசிஷ்டாத்வைதம் என்ற
தத்துவத்தை முன்வைத்தார்.
**
ராமானுஜர் திருவரங்கத்தில் வாழ்ந்தபோது, அங்குள்ள
பிராமணர்கள் எவரையும் மதிக்காமல் ஆணவத்தின்
உச்சாணிக் கொம்பில் ஏறி நின்றனர். வெறித்தனமான
தீண்டாமையை அனுசரித்தனர். ராமானுஜர் இவர்களை
எதிர்த்துப் போராடினார். இவர்களை அடக்கி ஒடுக்கினார்.
**
தீண்டத் தகாத குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வாரைத்
தம்முடன் அரங்கர் இணைத்துக் கொண்டார் என்பதால்
அரங்கரும் தீட்டாகி விட்டார். ஆதலால் தீண்டாமையை
அனுசரிக்கும் பிராமணர் எவரும் அரங்கரை வணங்கக் கூடாது
என்று கூறி, பிராமணர்களை விரட்டினார். பிராமணர்கள்
பணிந்தனர்.
**
அரங்கரின் பக்தர்கள் எவர் ஆயினும், எந்தச் சாதி ஆயினும்
வைணவச் சின்னங்களை (நாமம் தரிப்பது முதலியன)
அணிந்து கொள்ளாலாம் என்று அறிவித்த ராமானுஜர்
இதற்கு பிராமணர்களையும் இணங்க வைத்தார். அன்று
வழிபாட்டு உரிமை பெண்களுக்கு இல்லாமல் இருந்தது.
பெண்களுக்கும் அந்த உரிமையை வழங்கினார்.
**
வழிபாட்டிலும் பாசுரங்களைப் பாடுவதிலும் தமிழ்
புறக்கணிக்கப் பட்டு இருந்தது. திருவரங்கத்தில்
ஒவ்வொரு நாளும் பெருமாள் ஊர்வலத்தின் போது
பக்தர்கள் தமிழ்ப் பாசுரங்களைப் பாடிக்கொண்டு
போகச் செய்தார் ராமானுஜர். காலப் போக்கில்
இது ஒரு மரபாகவே நிலைபெற்று விட்டது.
இதனால், "தமிழ் முன் செல்ல, திருமால் பின் வர"
என்ற நிலை ஏற்பட்டது.
**
1) சைவம் வைணவம் இரண்டிலும் வைணவமே தமிழுக்கு
மிகவும் நெருக்கமாக இன்றும் இருந்து வருகிறது என்றால்
அதற்கு மூல காரணம் ராமானுஜரே.
2) சூத்திரர்கள் உள்ளிட்ட அனைத்துத் தாழ்ந்த சாதியினரும்
நாமம் தரிக்க உரிமை இல்லாதபோது, அந்த உரிமையைப்
பெற்றுத் தந்தவர் ராமானுஜர்
3) பெண்களும் கோவிலுக்கு வரலாம்; வந்து வணங்கலாம்
என்று பெண்களுக்கு வழிபாட்டு உரிமையைப் பெற்றுத்
தந்தவர் ராமானுஜர்.
4) கோவில் நுழைவுப் போராட்டத்தை அன்றே நடத்தி
வெற்றியும் பெற்றவர் ராமானுஜர்.
5) தீண்டத்தகாத குலத்தைச் சேர்ந்த உறங்காவில்லி தாசர்
என்பவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டு வைணவ
வேதங்களை அவருக்குப் போதித்தவர் ராமானுஜர்.
------------------------------------------------------------------------------------
தொடரும்

********************************************************8888888

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக