திங்கள், 16 மார்ச், 2015

வேலையற்ற மாமியார் 
கழுதையைப் போய்ச் சிரைத்தாளாம்!
------------------------------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------
மக்களவையில் நிறைவேறிய, அதிமுக ஆதரித்த 
நிலப்பறிப்புச் சட்டம் பற்றிய கட்டுரை. (பகுதி ஒன்று) 
-------------------------------------------------------------------------
1) UPA-2 ஆட்சிக் காலத்தில், மன்மோகன்சிங் அரசு 
"நிலம் கையகப் படுத்தல் சட்டம்" (LARR 2013) என்ற 
ஒரு சட்டத்தை இயற்றியது. தங்கள் இஷ்டத்துக்கு 
நாட்டின் நிலத்தை அற்ப சொற்ப விலை கொடுத்துப் 
பறித்துக் கொள்ளும் பெருமுதலாளிகளுக்கு ஒரு 
கடிவாளமாக இச்சட்டம் இருந்தது.
--------------------------------------------------------------------------------------
2) இதை விரும்பாத பெருமுதலாளிகள் மோடியிடம் 
முறையிட்டனர். எனவே மன்மோகன் சட்டத்தை நீர்த்துப் 
போகச்செய்யும் விதத்தில், மோடி அரசு டிசம்பர் 2014இல் ஓர் 
அவசரச் சட்டம் கொண்டு வந்தது. ஓர் அவசரச் சட்டமானது 
(ORDINANCE) ஆறு மதங்களுக்குள், சட்டமாக (ACT) மாறி 
விட வேண்டும். இல்லையேல் அது காலாவதி ஆகிவிடும்.
எனவே, மோடி அரசு நிலப்பறிப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் 
தாக்கல் செய்தது. இச்சட்டம் மக்களவையில் கடந்த வாரம் 
(மார்ச் 2015) அதிமுக ஆதரவுடன் மிக எளிதாக, குரல் ஓட்டு
மூலம் நிறைவேறியது.
---------------------------------------------------------------------------------------------
3)இனி மாநிலங்களவையில் இது நிறைவேற வேண்டியதுதான் 
பாக்கி. நியமன உறுப்பினர்கள் உள்ளிட்டு மாநிலங்களவையின் 
மொத்த உறுப்பினர்கள் 250. கட்சிவாரி நிலவரம்: 
காங்கிரஸ்-67, பாஜக-46, சமாஜ்வாதி-15,
ஐக்கிய ஜனதாதளம்-12, திரணமூல்-11, அதிமுக-11,
பகுஜன்-10, மார்க்சிஸ்ட்-9, பிஜு ஜனதாதளம்-9,
தேசியவாத காங்கிரஸ்-6, தெலுங்குதேசம்-6, திமுக-4,
சிவசேனை-3, கம்யூனிஸ்ட்(CPI)-2.
பல்வேறு துண்டு துக்காணிக் கட்சிகள், சுயேச்சைகள்,
நியமன உறுப்பினர்கள் ஆகியவை பற்றிக் குறிப்பிடத் 
தேவையில்லை.
தகவல் ஆதாரம்: RAJYASABHA SECRETARIAT இணையதளம்,
POSITION AS ON MARCH 16, 2015.
-------------------------------------------------------------------------------------- 
4) இருசபைக் கூட்டுக் கூட்டம் என்றால், மொத்தம் 795 ஆகிறது 
(நியமன உறுப்பினர்கள் உள்ளிட்டு). இதில் 400 வாக்குகளைப் 
பெற்றால், மசோதா நிறைவேறி விடும். பாஜகவுக்கு 
மக்களவையில் 340 இடங்கள் இருப்பதால், மாநிலங்களவையில் 
60 வாக்குகள் பெற்றால் போதும். பாஜகவின் 46 மற்றும் 
அதிமுகவின் 11 இவ்விரண்டும் சேர்ந்தால் மட்டுமே போதும்.
------------------------------------------------------------------------------------------------
5) மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற 
விட மாட்டோம் என்று பாஜக எதிர்ப்புக் கட்சிகள் எவையும் 
இன்னும் சூளுரைக்கவில்லை. நாடாளுமன்றத்துக்கு 
வெளியே, மக்களைத் திரட்டிப் போராட்டங்களும் 
இயக்கங்களும் நடத்த, இன்னும் எந்தக் கட்சியும் 
தயாராக இல்லை. இந்த மசோதா எவ்வளவு ஆபத்தானது 
என்ற உண்மை இன்னும் மக்களிடம் போய்ச் சேரவில்லை.
-----------------------------------------------------------------------------------------------
6) தாலி போடலாமா, ஜட்டி போடலாமா, நிரோத் போடலாமா 
என்றெல்லாம் விவாதம் நடத்தும் ஊடகங்கள், மெய்யான 
நியாயமான, மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் 
பிரச்சினைகளை  வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.
வேலையற்ற மாமியார் கழுதையைப் போய்ச் 
சிரைத்தாளாம் என்பதுபோல் செயல்படும் முதலாளித்துவ 
ஊடகங்களை முறியடிப்போம்!
............ பகுதி-1 முற்றியது, பகுதி-2 பின்னர் வெளிவரும்.
-------------------------------------------------------------------------------------------------
********************************************************888               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக