திங்கள், 30 மார்ச், 2015

(2) பின் நவீனத்துவம்: ஓர் எளிய அறிமுகம்!
-------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------------------ 
"இருத்தலியல்" (existentialism ) என்ற புதியதொரு தத்துவத்தை
பிரஞ்சு தத்துவஞானி ஜீன் பால் சார்த்தர் ( JEAN PAUL SARTRE )
முன்வைத்தார். 1950களில் இத்தத்துவம் பெரும் புகழுடன் 
விளங்கியது.(ஜீன் பால் சார்த்தர் இறுதிவரை மார்க்சியராகவே 
இருந்தார். அவர் பின்நவீனத்துவர் அல்லர் என்பது கருதத் தக்கது.)

பெர்டினண்ட் சசூர் (FERDINAND SAUSSURE ) என்ற அறிஞர் 
"அமைப்பியல்" என்ற தத்துவத்தை முன்மொழிந்தார்.
ழாக் டெரிடா (JACQUES DERRIDA ) என்ற அறிஞர் "கட்டுடைத்தல்"
என்ற கோட்பாட்டை முன்மொழிந்தார்.
தொடர்ச்சியாகவும் வரிசையாகவும் பல கோட்பாடுகள் 
முன்மொழியப் பட்டன.
**
மிஷல் பூக்கோ ( MICHAEL FOUCALT ) 
ரொலான் பார்த் (ROLAND BARTHES )
ழாக் லக்கான் (JACQUES LACAN )
பெலிக்ஸ் கட்டாரி (FELIX  GUATTARI )
ஜீன் போத்ரியார் ( JEAN BAUDRILLARD )
உள்ளிட்ட பலப்பல அறிஞர்கள் புதிய புதிய கோட்பாடுகளை 
முன்மொழிந்தனர். மேற்கூறிய அனைத்துக் கோட்பாடுகளின் 
திரட்சி பின்நவீனத்துவம் என வழங்கப்படுகிறது.
(உதாரணத்துக்காக ஒரு சில அறிஞர்கள் மட்டுமே  
குறிப்பிடப் பட்டுள்ளனர்.)
**
பின் நவீனத்துவம் மார்க்சியத்தைத் திறனாய்வு செய்தது;
மார்க்சியத்தின் போதாமை என்று சிலவற்றைக் கூறியது,
இந்திய-தமிழகச் சூழலில் பின்நவீனத்துவம் செல்வாக்குப்  
பெற்றதைத் தொடர்ந்து, தலித்தியமும் பெண்ணியமும்
தனித்துவம் மிக்க கோட்பாடுகளாக பின்நவீனத்துவத்தால்  
அறிமுகப் படுத்தப் பட்டன: பெருத்த கவனிப்பைப் பெற்றன.
பெண்ணியம் தலித்தியம் சார்ந்த சிக்கல்களுக்கு
மார்க்சியம் என்ற ஒருங்கிணைந்த தத்துவத்தில் 
தீர்வு இல்லை என்ற கண்டுபிடிப்புகளும் கண்டனங்களும் 
எழுந்தன.  பேரரசியல் என்பதோடு, நுண்ணரசியல் என்பதும் 
தத்துவ-அரசியல் அரங்கில் தலையெடுத்தது. 
----------------------------------------------------------------------------------------
தொடரும் 
--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக