(2) தமிழ்நாட்டின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி
ராமானுஜரின் சாதி ஒழிப்புப் பணிகளைத்
தம் கைவண்ணத்தில் காவியம் ஆக்கும்
கலைஞரின் இலக்கியப் பணி போற்றத்தக்கதே!
------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-------------------------------------------------------------------------
Ignorance is the source of all evils.--Socrates.
அறியாமையே சகல தீமைகளுக்கும் ஊற்றுக்கண்.
----சாக்ரட்டிஸ்-----

கல்வி சிறந்த தமிழ்நாடு என்றார் பாரதியார். இது பொய்
என்று நிரூபித்துக் கொண்டு இருக்கிறான் தமிழன்.
கலைஞரின் ராமானுஜ காவியம் என்றதுமே, இவன்
வெளிப்படுத்தும் ஏளனம் இவனின் அறியாமையின்
அடையாளம். வீங்கிப்போன இவன் மண்டையில்
உள்ள சிறுத்துப்போன மூளையில் ராமானுஜர் பற்றி
எந்தத் தரவும் கிடையாது.
**
120 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்த
வைணவப் பேராசான் ராமானுஜர் (கி.பி 1017-1137)
வெறும் ஆன்மிகச் செல்வர் மட்டுமல்லர்.
அவர் தமிழகம் அதற்கு முன் கண்டும் கேட்டும் இராத,
மாபெரும் சீர்திருத்தச் சிற்பி; சாதி எதிர்ப்புப் போராளி!
**
உயர்குலத்தில் பிறந்த ராமானுஜர் தம் குருவாக
ஏற்றுக் கொண்ட திருக்கச்சி நம்பி தீண்டத்தகாத
குலத்தைச் சேர்ந்தவர். தம் ஆசானிடம் தீண்டாமை
பாராட்டினார் என்பதற்காகத் தம் மனைவியை விட்டுப்
பிரிந்து துறவறம் பூண்டவர் ராமானுஜர்.
**
ராமானுஜர் என்னும் பெருங்கடலின் சில துளிகளை
மட்டுமே இங்கு தெளித்துள்ளேன். நுனிப்புல் வாசகர்கள்
குறுங் கட்டுரைகளை மட்டுமே படிப்பார்கள் என்பதால்,
அடுத்தடுத்த பதிவுகளில் ராமானுஜரின் மேன்மையைத்
தொடர்ந்து எழுதுகிறேன்.
**
சாதி ஒழிப்பிலும் இலக்கியத்திலும் ஆர்வம் உடைய
அன்பர்கள் இக்கட்டுரையைப் பெரிய அளவில்
பரப்பும் கடப்பாடு உடையவர்கள் என்பதை நினைவு
படுத்துகிறேன்.
********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக