வெள்ளி, 6 மார்ச், 2015

போலிப் பெண்ணுரிமைவாதிகளின் 
யோனிமையவாதச் சிந்தனைகள் 
அறிவியலுக்கு எதிரானவை என்பதற்கான நிரூபணம்!
(நிர்பயா ஆவணப் படம் குறித்து)
------------------------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன், 
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------ 
முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், இணையப் 
பத்திரிகைகளிலும், தொலைக் காட்சி விவாதங்களிலும்
மேட்டுக்குடிச் சீமாட்டிகள் பிற்போக்குக் கருத்துக்களை 
உதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நிர்பயா ஆவணப் 
படத்தைத் தடை செய்து விட்டதால், நாடு எவ்வளவு 
பின்னோக்கிப் போய்விட்டது என்று கண்ணீர் சிந்தும் 
இச்சீமாட்டிகளின் மூளையில் அறிவியலுக்கு மட்டும்தான் 
இடமில்லை போலும்.
-------------------------------------------------------------------------------------------
"யோனிமையவாதம்" (vagina centric) என்று பின்நவீனத்துவத்தில் 
ஒரு கோட்பாடு உண்டு. (யோனி என்றால் அல்குல், பெண்குறி).
இதற்கு எதிராக, "ஆண்குறிமையவாதம்" (DICK CENTERED) என்ற ஒரு கோட்பாடும் உண்டு. DICK என்றால் PENIS என்று கொள்ளுங்கள்.
எனினும், இது சரியான மொழிபெயர்ப்பு அன்று என்பது தெரியும்.
PENIS என்பது பாடப் புத்தகத்தில் இடம் பெறும் கௌரவமான சொல்.
எனவே, DICK என்றால் தமிழில் சொல்லப்படும் கொச்சைச் 
சொல்லை எடுத்துக் கொள்ளவும்.அதுதான் சரியான மொழிபெயர்ப்பு.
-------------------------------------------------------------------------------------------------
இவ்வளவு அக்கறையோடு மொழிபெயர்க்காவிட்டால், 
பின்னவீனத்துவப் பெண்ணுரிமைவாதிகள் நம்மை அடித்தே 
கொன்று விடுவார்கள். 
---------------------------------------------------------------------------------------------------
அனேகமாக எல்லா யோனிமையவாதிகளும் ஒரே குரலில் 
தெரிவிக்கும் 'கருத்து' இதுதான். "எல்லா ஆண்களும் 
அயோக்கியர்கள்!எல்லா ஆண்களும் கற்பழிப்பார்கள். ஒரு சில 
பேர் மட்டும்தான் விதிவிலக்கு!".
இந்தக் கூற்று சரிதானா? இதை அறிவியல் ரீதியாக நாம் 
பரிசீலிப்போம்.
---------------------------------------------------------------------------------------------------------
ஆண்குறி உள்ள ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பான் (வன்புணர்ச்சி
செய்வான்) என்ற இக்கருத்து முற்றிலும் தவறானது.
மானுடவியலுக்கே எதிரானது (MISANTHROPICAL). 
மானுட உளவியல் அறிஞர்கள், ஒட்டு மொத்த மானுடத்தின் 
உளவியலை ஆராய்ந்து, பல்வேறு சோதனைகளின் முடிவைக் 
கொண்டு, பெறப்பட்ட உண்மை இது.
(தனி மனிதனின் மனத்தை ஆராய்வது உளவியல் (PSYCHOLOGY).
ஒட்டுமொத்த மனித குலத்தின் உளவியலை ஆராய்வது
மானுட உளவியல் (ANTHROPOLOGICAL PSYCHOLOGY).)
-----------------------------------------------------------------------------------------------------
யோனிமையவாதிகள் கூறுவது உண்மையானால், இந்தியாவில் 
உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளும் வன்புணர்ச்சி 
செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால்,
 உண்மை அதுவன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
----------------------------------------------------------------------------------------------------------
பசி, தாகம், தூக்கம், காமம் ஆகியவை எல்லா மனிதர்களுக்கும், 
(எல்லாப் பாலூட்டிகளுக்கும்) உள்ள இயல்பான பண்புகள்.
பசி எடுப்பது எப்படி இயல்பானதோ, அப்படித்தான் காமவயப் 
படுவதும். காமவயப் படுகிறவன் எல்லோருமே வன்புணர்ச்சி 
செய்வதில்லை; செய்யப் போவதில்லை. 
உங்களுக்குக் கொடும் பசி என்பதற்காக, நீங்கள் ஒரு 
ஓட்டலில் போய்த் திருடப் போவதில்லை. அதுபோல் தான்.
காமவயப் படுகிறவன் எல்லோரும் வன்புணர்ச்சி செய்வதில்லை. 
------------------------------------------------------------------------------------------------------- 
ஏனெனில், வன்புணர்ச்சி என்பது ஒரு குற்றச் செயல் 
(CRIME or an OFFENCE at least) என்ற கருத்தாக்கம், இந்தியாவில் 
ஒவ்வொரு ஆணின் உளவியலிலும் கட்டமைக்கப் பட்டு உள்ளது.
எனவே, காமவயப் படுதலுடன், குற்றம் புரியும் மனநிலை 
உள்ள குற்ற மனம் வாய்க்கப் பெற்றவர்கள் மட்டுமே 
வன்புணர்ச்சி செய்வார்கள்.
எனவே, எல்லா ஆண்களும் கற்பழிக்கக் கூடிய கயவர்கள் 
என்ற யோனிமையவாதிகளின் கூற்றில் உண்மை இல்லை
--------------------------------------------------------------------------------------------------- 
அ) குற்றங்கள் தண்டிக்கப் படும் 
ஆ) தண்டனை விரைந்து கிடைக்கும் 
இ) தண்டனை கடுமையாக இருக்கும் 
ஆகிய கருத்தாக்கங்களைக் கொண்ட உளவியல்
கட்டமைக்கப் படுமானால், வன்புணர்ச்சிகள் குறையும்.
---------------------------------------------------------------------------------------------------
யார் யார் அந்த மேட்டுக்குடிச் சீமாட்டிகள் என்று சொல்ல 
வில்லையே என்று வாசகர்கள் கேட்கலாம். இங்கு பெயர்கள் 
முக்கியம் இல்லை.
------------------------------------------------------------------------------------------------------- 
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
*********************************************************888888888888    .  


       
  
    
     
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக