கியூபாவில் மாட்டு இறைச்சி உண்ணத் தடை ஏன்?
பிடெல் காஸ்ட்ரோவின் கம்யூனிஸ்ட் அரசின் முடிவு ஏன்?
---------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------------------------------------------------
1) உலகின் சர்க்கரைப் பானை ( THE SUGAR BOWL OF THE WORLD)
என்று அறியப்பட்ட நாடு கியூபா. அங்கு மிகுதியும் விளையும்
பயிர் கரும்பு மட்டுமே.
2) சர்க்கரை ஏற்றுமதியில் உலகில் முதல் இடத்தில் இருந்த
கியூபா, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது. 2000இல்
தனது முதல் இடத்தைப் பறிகொடுத்தது.
--------------------------------------------------------------------------------------------------
3) இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உலகச் சர்க்கரைச்
சந்தையில் கியூபாவைப் பின்னுக்குத் தள்ளின.
4) இதனால் சரிந்து விழும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த
கரும்பு சாகுபடியைச் சிறிது குறைத்துக் கொண்டு, கால்நடை
வளர்ப்பை ஊக்குவிக்க கியூபா அரசு முடிவு செய்தது.
-------------------------------------------------------------------------------------------------
5) கியூபா அரசின் இந்த முடிவு, கியூபாவின் இயற்கை வளம்,
பூகோளம் சார்ந்து எடுக்கப்பட்ட, கியூபாவின் சுற்றுச் சூழல்
வளங்களைத் திறம்படப் பயன்படுத்தவல்ல முடிவு ஆகும்.
6) கியூபாவில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று
புல் வளர்ந்து காணப்படும். இதனால் செலவே இல்லாமல்
கால்நடைத் தீவனம் கிடைத்து விடுகிறது.

7) மேலும், ஆண்டுதோறும் அதிகமான மழைப் பொழிவைப்
பெறும் நாடு கியூபா. அங்கு மாடுகளைக் கொன்று தின்கிற
ஓநாய் போன்ற விலங்குகள் (PREDATOR ANIMALS)அறவே
கிடையாது. இக்காரணிகளால், மாடு வளர்ப்பு என்பது கியூபாவில்
செலவு குறைந்த, அதிக லாபம் தருகிற தொழில் என்று
கியூபாவின் பொருளாதார நிபுணர்கள் முடிவுக்கு வந்தனர்.
8) இந்த முடிவைச் செயலாக்க முற்படும்போது, மக்களின்
மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஒரு தடையாக முன் நின்றது.
எனவே, அந்தத் தடையை அகற்றும் நோக்கில், பசுவதைத்
தடைச் சட்டம் கியூபாவில் 2003இல் கொண்டு வரப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------------
9) "மக்களின் உணவுப் பழக்கத்தில் அரசு தலையிடலாமா?",
என்றும் "நான் எதைச் சாப்பிடுவது என்று தீர்மானிக்க நீ யார்?"
என்றும் கியூபாவில் யாரும் "வீர முழக்கம்" செய்ய
முடியாது. அப்படிச் செய்பவர்களை வரவேற்க கியூபாவின்
இருட்சிறைகள் வாசல் திறந்து வைத்துக் காத்திருக்கின்றன.
10) கருத்துரிமை என்ற பெயரில், மக்களுக்கும் அரசுக்கும்
எதிரான கருத்துக்களை வெளியிட காஸ்ட்ரோ அரசு
அனுமதிப்பதில்லை. இது சரியானதே. ஏனெனில்,
மார்க்சியம் எதிரி வர்க்கத்துக்குக் கருத்துரிமை
வழங்குவது இல்லை.

பின்குறிப்பு: இக்கட்டுரைக்கான தரவுகள் கியூப அரசின்
அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து பெறப்பட்டவை.
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக