வியாழன், 15 மார்ச், 2018

”ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”
என்று உலகம் தோன்றியதும் தோன்றிய ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரையிலான வேறுபாட்டினை/ பரிணாமத்தை நுணுக்கமாகச் செதுக்கி வச்சுட்டுப் போன தொல்காப்பியனைப் படிச்சுட்டோமா?
-------------------------------------
“செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்று பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்”
என்று சூரியனையும் அதைச் சுற்றி இருக்கும் கோள்கள் மற்றும் இயக்கத்தைப் பற்றிச் சொன்ன புறநானூற்றுப் புலவன் உறையூர் முதுகண்ணன் சாத்தனாரைப் படித்தாகி விட்டதா?
------------------------------------
“மீன்றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
அம்புசே ருடம்பினர் சேர்ந்தோ ரல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி”
என்று வெட்டுக்காயங்களை வெள்ளி ஊசியால் எப்படி தைத்தார்கள் என்று பதிற்றுப் பத்தில் விளக்கிச் சொன்ன பரணரைப் படிச்சுட்டோமா?
----------------------------------
”விரி கதிர் மதியமொடு வியல் விசும்புபுணர்ப்ப
எரி சடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
-
-
-
புரை கெழு சையம் பொழி மழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்”
என்று எந்தெந்த கோள் எங்கெங்கே இருக்கும் போது என்னென்ன நிகழ்ந்து வைகையில் வெள்ளம் வந்தது என்று பரிபாடிய நல்லந்துவனரைத்தான் தெரிஞ்சு வச்சிருக்கோமா என்றெல்லாம் கேள்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக