திங்கள், 26 மார்ச், 2018

வெற்றிடம் என்றால் என்ன?
அறிவியல் விளக்கம்!
=============================
நியூட்டன் அறிவியல் மன்றம்
============================
குவான்டம் இயற்பியல் வெற்றிடம் என்பதைப்
பின்வருமாறு வரையறுக்கிறது.

Vacuum is that region of space which has a low energy level.
மிகக் குறைவான ஆற்றல் மட்டத்தைக் கொண்டிருக்கும்
வெளியின் ஓர் இடமே வெற்றிடம் ஆகும்.

Vacuum is that region of space which is devoid of matter.
பருப்பொருள் இல்லாத, வெளியின் ஓர் இடமே
வெற்றிடம் ஆகும்.

இது செவ்வியல் வரையறை (classical definition) ஆகும்.
அதாவது நியூட்டனின் இயற்பியல் (Newtonian physics)
இவ்வாறு வரையறுத்தது.

குவான்டம் இயற்பியலின்  வரையறையே
மேம்பட்டது; முழுநிறைவானது(perfect), துல்லியம் நிறைந்தது.

அண்ட வெளியில் நிறைய இடங்கள் வெற்றிடங்களாக
உள்ளன. ஆழ்வெளிக்குச் செல்லச் செல்ல வெற்றிடங்கள்
அதிகரிக்கும்.

வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டு விடுவதில்லை.
வெற்றிடம் உருவான மறு கணமே அது நிரப்பப்பட்டு
விடுகிறது என்பது தவறு.

நீடித்த வெற்றிடங்கள் (sustained vacuum) அண்ட வெளியில்
நிறையவே இருக்கின்றன. ஆண்டுக்கணக்கில் அவை
நிரப்பப் படாமல் வெற்றிடங்களாகவே நீடிக்கின்றன.

காற்றழுத்தமானி (barometer) என்ற ஒரு கருவி உண்டு.
வளிமண்டலத்தின் காற்று அழுத்தத்தை அளவிடும்
கருவி இது. கடற்பயணம் மேற்கொள்வோர், மீனவர்கள்
ஆகியோரின் படகுகளில் காற்றழுத்தமானி இருக்கும்.

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு, டாரிசெல்லி (Toricelli)
என்னும் இத்தாலிய விஞ்ஞானி காற்றழுத்தமானியைக்
கண்டு பிடித்தார். இவரின் கருவி இன்றும் பள்ளி
ஆய்வுக் கூடங்களில் தவறாமல் இருக்கும். 11,12 வகுப்புச்
சிறுவர்கள் டாரிசெல்லியின் காற்றழுத்தமானி
பற்றி அறிவார்கள்.

டாரிசெல்லி தன்னுடைய அழுத்தமானியில் ஒரு
வெற்றிடம் உருவாவதை உணர்ந்தார். அது ஒரு
மகத்தான சிறப்புக்குரிய அம்சம். இந்த வெற்றிடம்
ஒரு நீடித்த வெற்றிடம் (sustained vacuum) ஆகும். அதாவது
இந்த வெற்றிடம் உருவான உடன் நிரப்பப்பட்டு
விடுவதில்லை.

ஆர்வம் உள்ளவர்கள் barometer பற்றியும் டாரிசெல்லி
பற்றியும் physics text books படித்து மேலும் தெரிந்து கொள்க!
*******************************************************************      





    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக