வியாழன், 12 நவம்பர், 2020

 முட்டாள்களே இன்றைய சமூகத்தின் தேவை!

-----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------------------------

எனக்கு முட்டாள்களே வேண்டும் என்றார் பெரியார்.

இதை ஏற்க இயலாதவர்கள் கூட, இதில் ஒரு தர்க்கம் 

இழையோடுவதை உணரலாம்.  சில சமயங்களில் 

முட்டாள்களால் ஒரு சமுகம் பெருத்த நன்மை 

அடைந்து விடக் கூடும். இதை நன்கறிந்த பெரியார் 

முட்டாள்களை வரவேற்றார். எனக்கு அறிவாளிகள் 

வேண்டாம் என்றார் துணிச்சலுடன்.


பெரியாரைப் போலவே ஆர் எஸ் எஸ்சும் முட்டாள்களை 

வரவேற்கிறது. தமிழ்ச் சமூகம் பெரும் எண்ணிக்கையில் 

முட்டாள்களைக் கொண்ட சமூகம். மின்னணு வாக்குப் 

பதிவு எந்திரங்களைக் கண்மூடித் தனமாக எதிர்க்கும் 

அடிமுட்டாள்கள் உலகிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்.

  

எங்கெல்லாம் பாஜக தேர்தல் வெற்றி அடைகிறதோ 

அங்கெல்லாம் அதற்குக் காரணம் மின்னணு எந்திரங்களே 

என்று எதையும் சிந்திக்காமலே சொல்லும் மூடர்களை  

கட்டணக் கழிப்பிடம் முதல் கணிகையர் விடுதி வரை 

காணலாம். நேற்று முடிவு தெரிந்த பீஹார் தேர்தலில்

EVMகளில் மோசடி செய்துதான் பாஜகவும் நித்திஷ்குமாரும் 

வெற்றி பெற்றனர் என்று கூசாமல் சொல்லும் தற்குறிகளின் 

ஜனத்தொகை தமிழ்நாட்டில்தான் அதிகம்.


போலி முற்போக்குகள், போலி இடதுசாரிகள், போலி 

மார்க்சிய லெனினிஸ்டுகள், போலி நக்சல்பாரிகள் என்று 

சகல விதமான போலிகளும் தங்களின் அறியாமையை 

கூச்ச நாச்சமின்றி வெளிப்படுத்திப் பெருமை அடையும் 

இடம் தமிழ்நாடு. இங்குள்ள பத்திரிகையாளர்களைக் 

கேட்கவே வேண்டாம். பத்தாங்கிளாசுக்கு மேல் 

படித்தே இராத, ஆங்கிலம் தெரியாத, இந்தியோ பிஹாரியோ 

தெரியாத, பீஹாருக்கு ஒருமுறை கூடச் சென்று  பார்த்திராத 

முட்டாள் EVMகள் மீது பழி சுமத்தி ஒரு கட்டுரை எழுதுவான்.

இத்தகைய புழுவினும் இழிந்த ஈனப்பயல்களே ஊடகங்களை 

இன்று ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்.


EVMகளுக்கு எதிரான கருத்தைக் கூறுவோர் அறிவியலுக்கு 

எதிரானவர்கள். எனவே வன்மையான கண்டனத்துக்கு 

உரியவர்கள். ஆனால் ஆர் எஸ் எஸ் அமைப்பானது இந்த 

முட்டாள்களைக் கண்டிப்பதே இல்லை. ஏன்? என்ன 

காரணம்?


ஒரு ஆர் எஸ் எஸ் முழுநேர ஊழியரைக் கேட்டேன். அவர் 

சொன்னார்: "எங்களின் எதிரிகள் முட்டாள்களாக 

இருப்பது எங்களுக்கு லாபம் அல்லவா? நாங்கள் ஏன் 

அவர்களின் தப்பைச் சுட்டிக் காட்டி, அவர்களைத் 

திருத்தி புத்திசாலிகளாக ஆக்க வேண்டும்? அதனால் 

எங்களுக்கு என்ன லாபம்?"


ஆர் எஸ் எஸ்சின் தர்க்கம் அவர்களைப் பொறுத்தமட்டில்

சரிதான். ஆனால் அத்தர்க்கம் நியூட்டன் அறிவியல் 

மன்றத்துக்கு ஏற்புடையது அல்ல. அறிவியலுக்கு எதிரான 

பிற்போக்குக் கருத்துக்களை உடனுக்குடன் 

அம்பலப் படுத்துவதும் அம்பலப்படுத்தி முறியடிப்பதும் 

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கடமை ஆகும்.

சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கு ஏற்படுவதற்கு 

இடைவிடாமல் பாடுபடுவதே எமது கடமை.


எனவே EVMகள் குறித்த அறிவியலுக்கு எதிரான 

பிற்போக்கு கருத்துக்களை பரப்புவோர் யாராக 

இருந்தாலும் அவர்களை நாங்கள் முறியடிப்போம்.

------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

அறிவியல் ஒளி பிப்ரவரி 2019 இதழில் 

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் 

மோசடி செய்ய இயலுமா என்ற பொருளில் 

மிக நீண்ட விளக்கக் கட்டுரை எழுதி உள்ளேன்.

அதை வாசகர்கள் படிக்குமாற்று வேண்டுகிறேன். 

அதில் நான் முன்வைத்த கருத்துக்களை மறுக்க 

இதுவரை எந்த ஒரு EVM எதிர்ப்பாளருக்கும் துப்பு இல்லை.

*******************************************************     

.



        


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக