இன்சுலினைக் கண்டுபிடித்து
நோபல் பரிசு பெற்ற
மருத்துவர்களுக்கு நன்றி செலுத்துவோம்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
இன்று (நவம்பர் 14) உலக நீரழிவு நாள்!
நீரழிவு நோய்க்கு மருந்தாகும் இன்சுலினைக்
கண்டுபிடித்த டாக்டர் பிரடெரிக் பான்டிங்கின்
பிறந்த நாளான நவம்பர் 14 ஆண்டுதோறும்
ஐநா சபையால் உலகம் முழுவதும் உலக நீரழிவு
நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1923ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு
மருந்தியல் துறையில் (PHYSIOLOGY AND MEDICINE)
இருவருக்குப் பகிர்ந்து வழங்கப் பட்டது.
1. டாக்டர் பிரடெரிக் பான்டிங்
(Dr Frederick Grant Banting)
2. டாக்டர் ஜான் மேக்லியாட்
( Dr John James Rickard Macleod)
ஆகிய இருவரும் பரிசைச் சமாகப் பகிர்ந்து
கொண்டனர்.
பரிசு எதற்காக வழங்கப் பட்டது?
இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது.
இவர்கள் இருவரும் நீரழிவு நோய்க்கு
மருந்தாகப் பயன்படும் இன்சுலினைக்
கண்டு பிடித்தனர்.
"The Nobel prize in physiology or medicine 1923
was jointly awarded for the discovery of insulin"
என்று Nobel prize citation குறிப்பிடுகிறது.
இன்சுலினைக் கண்டு பிடித்து உலகிற்கு
வழங்கி கோடானுகோடி உயிர்களைக்
காப்பாற்றிய
டாக்டர் பிரடெரிக் பான்டிங்
டாக்டர் ஜான் மேக்லியாட்
ஆகிய இருவருக்கும் தலை வணங்குவோம்!
*********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக