சனி, 14 நவம்பர், 2020

 கணவர் வேண்டாம்! பாலியல் பங்காளி போதும்!

பின்நவீனத்துவமும் அருந்ததி ராயும்!

--------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------------

அருந்ததி ராய் ஒரு அரசுசாரா நிறுவனத்தை (NGO)

நடத்தி வருகிறார். ஏகாதிபத்திய நிதி உதவியுடன் 

நடக்கும் அமைப்பு அது. அருந்ததி ராயின் 

எஜமானர்கள் இந்திய மக்கள் அல்ல. அவருக்கு 

நிதி வழங்குகிற ஏகாதிபத்தியம்தான் அவரின் 

எஜமான். தன்னுடைய எஜமான் சொல்லுகிறபடி 

கேட்பதுதான் அருந்ததி ராயின் வேலை. அதை 

அவர் செவ்வனே செய்து வருகிறார். இல்லையேல் 

வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் நிதி 

பெற முடியாது.  


NGO என்றால் என்ன? NGOக்களை ஏகாதிபத்தியம் 

எப்போது ஏன் உருவாக்கியது? அவை ஏன் மூன்றாம் 

உலக நாடுகளைக் குறிவைத்து, குறிப்பாக 

இந்தியாவைக் குறி வைத்து இயங்குகின்றன? 

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாத யார் 

எவராலும் இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள 

முடியாது. எனினும் தற்போது அதை விளக்க 

முற்படுவது இக்கட்டுரையின் வரம்புக்கு 

அப்பாற்பட்டது.


அருந்ததி ராய் ஒரு பின்நவீனத்துவ வாழ்க்கை

முறையைக் கடைப்பிடித்து வருபவர்.முறையாகத் 

திருமணம் புரியாமல் விரும்பிய எவருடனும் 

வாழ்ந்து வருபவர்.இது குறித்து விவரிக்க 

விரும்பவில்லை.


ஆனால் மார்க்சும் ஜென்னியும் வாழ்ந்த 

வாழ்க்கையை அருந்ததி ராய் வாழவில்லை.

லெனினும் குரூப்ஸ்கயாவும் வாழ்ந்த 

வாழ்க்கையை அவர் வாழவில்லை. 

சமூகம் உருவாக்கிய திருமணம் என்ற 

கட்டமைப்பை அவர் முற்றிலுமாக எதிர்த்தார்.        


மார்க்சிய லெனினியம் காலங்காலமாக நிலவும் 

திருமண முறையை ஏற்றுக் கொண்டுள்ளது.

அதைத் தாக்கித் தகர்க்க வேண்டும்  என்று 

மார்க்சியம் கருதுவதில்லை. நிலவுகிற 

திருமண முறையின் மீது மார்க்சியத்துக்கு 

கடுமையான விமர்சனங்கள் உண்டு என்ற 

போதிலும் திருமண முறையை ஒழித்துக் 

கட்ட வேண்டும் என்று மார்க்சியம் கருதவில்லை.

மார்க்சிய மூல ஆசான்கள் அப்படி நமக்குத் 

போதிக்கவில்லை.


மார்க்ஸ் ஜென்னியின் திருமணம் முன்னதாகவே 

சில ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயிக்கப் பட்ட 

ஒன்று. டிரையர் (Trier) நகரிலேயே பேரழகி 

ஜென்னிதான் என்று மார்க்ஸ் வர்ணித்தார்.          

1836ல் முறையாக நிச்சயம் செய்யப்பட்ட ,

அவர்களின் திருமணம், ஏழு ஆண்டுகள் கழித்து 

19 ஜூன் 1843ல் நடைபெற்றது.புனித பவுல் 

தேவாலயத்தில் (St Paul church) நடைபெற்றது.

மார்க்ஸ்-ஜென்னி தம்பதியருக்கு ஏழு குழந்தைகள் 

பிறந்தன.  


மார்க்சுடனான வாழ்க்கை கொடிய வறுமை நிறைந்த 

வாழ்க்கை ஆகும். தனது குழந்தைகளுக்கு உணவோ 

பாலோ மருந்தோ அளிக்க முடியாமல் குழந்தையைப் 

பறி கொடுத்தவர் ஜென்னி. எனினும் "அடுத்த 

பிறவியிலும் காரல் மார்க்ஸ்தான் என்னுடைய காதலர்"

என்று ஜென்னி கூறினார்.     

    


மானுடத்தின் உன்னதமான பண்புகளில் ஒன்று காதல்.

அது பண்பு மட்டுமன்று தலைமுறை தலைமுறையாக 

மானுட சமூகத்தைக் கட்டி எழுப்புகிற ஒரு விசையும்

ஆகும். எனவேதான் "காதல் அடைதல் உயிர் இயற்கை" 

என்கிறார் பாரதியார். 


மார்க்சும் ஜென்னியும் தங்களின் வாழ்க்கை மூலம் 

காதலின் மகோன்னதத்தை சமூகத்துக்கு 

உணர்த்தியவர்கள். இத்தகைய மேன்மையான

வாழ்க்கை முறையை அருந்ததி ராய் ஏற்கவில்லை.

அவர் பின்நவீனத்துவம் கூறுகிற வாழ்க்கை முறையை 

ஏற்றுக் கொண்டவர். 


காதலுக்குப் பதிலாக காமத்தை வைக்கிறது 

பின்நவீனத்துவம்.காதல், அதன் மகத்துவம் 

என்பதை எல்லாம் பின்நவீனத்துவம் ஏற்றுக் 

கொள்ளவில்லை. அவற்றை எள்ளி நகையாடுகிறது.


Politics makes strange bed fellows என்ற பழமொழியை நாம் 

அறிவோம். அரசியலில் யாவும் யாருடனும் படுக்கலாம் 

என்பது இதன் பொருள். அரசியலில் மட்டுமல்ல,

ஒருவர் தமது சொந்த வாழ்க்கையிலும் யாருடனும் 

படுக்கலாம் என்பதுதான் பின்நவீனத்துவம் கூறுகிற 

வாழ்க்கை முறை. திருமணம் என்கிற முறைமையை 

பின்நவீனத்துவம் ஏற்றுக் கொள்வதில்லை.


எந்த சட்ட திட்டத்தையும் மதிக்காதவர், பெரும் 

அராஜகவாதி (anarchist) என்று கருதப்பட்ட

ஈ வெ ரா பெரியார் கூட திருமணம் என்ற 

முறைமையை ஒருபோதும் எதிர்க்கவில்லை.

மாறாக, பொருந்தாத் திருமணம் என்ற போதிலும் 

மணியம்மையை முறையாகத் திருமணம் செய்து 

கொண்டார். அவரே முன்மொழிந்த சீர்திருத்தத்

திருமணம் அல்ல, அரசு அங்கீகரித்தபடியான 

பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற பதிவுத் 

திருமணம் ஆகும். பெரியார் ஒரு அராஜகவாதியே 

தவிர பின்நவீனத்துவவாதி அல்லர். (பெரியாரை 

ஒரு பின்நவீனத்துவவாதியாகச் சித்தரிக்க 

அ மார்க்ஸ் தொடர்ந்து முயன்று வருகிறார். அதில் 

தோல்வியும் அடைகிறார். பெரியாருக்கு 

பின்நவீனத்துவம் என்றால் என்னவென்றே தெரியாது).


பெரியார் மட்டுமின்றி, டாக்டர் அம்பேத்கரும்

பின்நவீனத்துவவாதி அல்லர். முறையாகத் திருமணம்

செய்து கொண்டு வாழ்ந்தவர் அம்பேத்கர். திருமணம் 

என்னும் சமூக ஒழுங்கை, முறைமையை ஒழித்துக் 

கட்ட அம்பேத்கர் ஒருபோதும் முயன்றதில்லை.

மாறாக அவற்றைப் பாதுகாப்பதிலேயே அம்பேத்கர்

கவனம் செலுத்தினார். காந்தி, நேரு, அம்பேத்கர்,

பெரியார் என்று எந்தத் தலைவருமே 

பின்நவீனத்துவத்தை ஏற்றவர்களோ ஆதரிப்பவர்களோ 

அல்லர். இது பின்நவீனத்துவவாதிகளின் 

துரதிருஷ்டம் ஆகும்.


அரசு ஊழியர்களுக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை 

இடமாறுதல் (transfer) செய்ய வேண்டும் என்பது மரபு.

இதன்படி அரசு ஊழியர்கள் வெவ்வேறு இடங்களுக்கு 

மாற்றப் படுவார்கள். பின்நவீனத்துவப் பெண்களும்  

பெரும்பாலும் ஒரு ஆணுடன் மூன்றாண்டுக்கு

மேல் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதில்லை.


கணவர் என்ற சொல் பின்நவீனத்துவத்தில் கிடையாது.

அதற்குப் பதிலாக, பாலியல் பங்காளி (sexual partner)

என்ற சொல்லே உண்டு. அருந்ததி ராயின் கணவர் 

யார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் கிடையாது.

அவரின் தற்போதைய பாலியல் பங்காளி யார் 

என்று கேட்டால் அருந்ததிராய் பதில் தருவார்.


1) அருந்ததி ராயை ஆதரிப்பது பின்நவீனத்துவத்தை 

ஆதரிப்பதாகும்.


2) அருந்ததி ராயை ஆதரிப்பது சமூக முறைமையான 

திருமணத்தை எதிர்ப்பதாகும். சமூக ஒழுங்கைச் 

சீர்குலைக்கும் செயலாகும். கூடாஒழுக்கத்தை 

ஏற்கும் தவறாகும். கூடாது என்று புத்தர் 

அறிவுறுத்திய பிழையுறு காமத்தைக் கைக்கொள்ளும் 

இழிதகைமை ஆகும்.  .      


3) அருந்ததி ராய் தமது நடத்தை மூலம் இந்தச் 

சமூகத்துக்கு உணர்த்துவது என்ன? கணவருக்குப் 

பதில் பாலியல் பங்காளி (No marriage, no husband,

sexual partner only) என்பதுதானே! லட்சக் கணக்கான 

கல்லூரி மாணவிகளிடம்  கணவர் வேண்டாம், 

பாலியல் பங்காளியே வேண்டும்" என்ற கொள்கை 

பரவினால் இந்தச் சமூகம் என்ன ஆகும்?


"இம்மை மாறி மறுமை ஆகினும் 

நீயாகியர் என் கணவர்  

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே"

என்பதுதான் தமிழ் மரபு. கணவரும் 

கணவரின் நெஞ்சு நேர்பவளாகிய அவரின் 

மனைவியும் நடத்தும் இல்லறமே சிறந்தது.

இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பதே

தமிழ் மரபு. இந்த மரபை அழிக்க 

முனைபவர்தான் அருந்ததி ராய்.      

அருந்ததி ராயை ஆதரிக்கும் மருதையன், ஆதவன் 

தீட்சண்யா, கருப்பு கருணா மற்றும் தமுஎகச 

அன்பர்கள் பதிலளிக்க வேண்டும்.

*************************************************************  



      


   

    

  




 


        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக