உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?
தெரிந்தால் இந்தப் படத்தைப் பாருங்கள்!
----------------------------------------------
The Queen's Gambit
-----------------------------
நடப்பாண்டில் 2020 வெளியான படம் இது.
இது ஹாலிவுட் படம்தான்! ஆங்கிலப் படம்தான்!
உண்மையில் இது முறையான திரைப்படம் அல்ல.
பல எபிசோடுகளின் தொகுப்பே இது.
இதை ஒரு மினி சீரிஸ் என்று சொல்கிறார்கள்.
The Queen's Gambit என்பது சதுரங்க விளையாட்டில்
பயன்படும் ஒரு technical term.
The Queen's Gambit என்றால் என்ன
என்று தெரியாது. இந்த வார்த்தையை
இப்போதுதான் முதன் முதலாகக் கேள்விப்
படுகிறேன் என்பவர்கள் அருள்கூர்ந்து
வேறு வேலை இருந்தால் பார்க்கவும்.
இந்தப் பதிவு உங்களுக்கானது அல்ல.
இது chess playersக்கு மட்டுமான பதிவு.
One who plays a game is a player
ஆனால் இங்கு player என்ற சொல்
ஒரு robust playerஐ மட்டுமே குறிக்கும்.
எனவே மற்றவர்கள் அருள்கூர்ந்து எனக்கு
நேர விரையம் ஏற்படுத்தாமல், வேறு
பதிவுகளைப் படிக்கச் செல்லவும்.
Gambit என்றால் பலி கொடுப்பது என்று
பொருள். Queen's gambit என்றால்
ஒரு QUEEN SIDE PAWNஐ பலி கொடுப்பது.
The Queen's gambit என்ற நாவல்தான்
படமாக ஆக்கப் பட்டுள்ளது.
நமது நண்பரும் வாசகருமான ஸ்ரீநிவாசன்
(முகநூலில் Srini Vasan) இப்படம் பற்றி
என் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
பார்க்குமாறு பரிந்துரைக்கவும் செய்துள்ளார்.
இன்னும் பார்க்கவில்லை. இந்த வார
முடிவுக்குள் பார்த்து விடலாம்
என்று நினைக்கிறேன்.நீங்களும்
பார்க்கலாம்.
**********************************************
இதில்
1) Queen's gambit accepted
2) Queen's gambit declined
என்று இரண்டு variations உண்டு.
Gambit accepted என்பதே standard variation.
Gambit declined என்பது unorthodox variation.
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக