ஸ்டெர்லைட் ஆலையை அவ்வளவு சுலபமாக
மூடி விட முடியாது! மூட மூடத் திறக்கும்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
1) இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் பெரும்
கார்ப்பொரேட் நிறுவனம் வேதாந்தா குழுமம். அதன்
ஒரு அலகுதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட்.
2) ஸ்டெர்லைட்டை மூடினால், அது சர்வதேச அளவில்
வேதாந்தா குழுமத்தைப் பாதிக்கும்.அது உலக
அளவில் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார
ஆதிக்கத்துக்கு விழும் அடியாகும். இதை உலக
ஏகாதிபத்தியம் சும்மா விடாது.
3) காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக ஆகிய எல்லாக்
கட்சிகளும் ஸ்டெர்லைட்டை ஆதரிக்கும் கட்சிகளே.
அவை அனைத்தும் ஆளும் வர்க்கக் கட்சிகளே.
ஸ்டெர்லைட்டைப் பாதுகாப்பதே இக்கட்சிகளின்
கடமை.
4) எனவே காங், பாஜக, திமுக, அதிமுக கட்சிகளோ
அல்லது வேறு எந்த ஒரு கட்சியோ ஸ்டெர்லைட்டை
எதிர்க்கும் என்று யாராவது நம்பினால், அவன்தான்
உலகிலேயே முழு முட்டாள்.
5) ஸ்டெர்லைட் ஆலை உள்ள இடமான தூத்துக்குடியில்
உள்ள எல்லா அரசியல் கட்சிப் பிரமுகர்களும்,
லெட்டர் பேட் கட்சிகள் உட்பட, ஸ்டெர்லைட் ஆலையின் வேலைகளை கான்டராக்ட் எடுத்துச் செய்து
லட்சக் கணக்கிலும் கோடிக் கணக்கிலும்
சம்பாதிப்பவர்கள்தான்.
6) எல்லோரும் ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகளே என்ற
இந்த உண்மை அங்குள்ள எல்லா மக்களுக்கும்
நன்கு தெரியும். எனவேதான் எந்த அரசியல்
கட்சிக்கும் இங்கு இடமில்லை என்று மக்கள்
எல்லா அரசியல் கட்சிகளையும் விரட்டி அடித்தார்கள்.
7) தமிழ்நாட்டில் வந்து தொழில் தொடங்குங்கள்
என்று ஸ்டெர்லைட்டை இருகரம் கூப்பி வரவேற்றார்
ஜெயலலிதா. 1994இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு
அடிக்கல் நாட்டியவர் ஜெயலலிதா.
8) அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில், 1997இல்
ஸ்டெர்லைட் நிறுவனம் உற்பத்தியைத்
தொடங்கியது. தொடர்ந்து உற்பத்தியை
அதிகரித்துக் கொண்டே வந்தது. நாள் ஒன்றுக்கு
350 டன் என்று உற்பத்தி நடந்தது.
9) 2005 ஸ்டெர்லைட்டின் வரலாற்றில் ஒரு திருப்பு முனை.
உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க
ஸ்டெர்லைட் விரும்பியது. நாள் ஒன்றுக்கு 350 டன்னில்
இருந்து 1000 டன்னாக உயர்த்துவதே ஸ்டெர்லைட்டின்
முடிவு.
10) ஆனால் அன்றைய தமிழக முதல்வராக இருந்த
ஜெயலலிதா (2004-2006) இந்த 1000 டன்னுக்கு
அனுமதி வழங்கத் தயங்கினார்.காரணம்
ஸ்டெர்லைட்டில் நிகழ்ந்த நிறைய விபத்துகளும்,
சூழலை மாசு படுத்தியது பற்றிய மக்களின்
புகார்களுமே. இதை அனுமதித்தால் தேர்தலில்
தனது வெற்றி பாதிக்கப் படலாம் என்று
கருதினார் ஜெயலலிதா.
11) அப்போது மத்திய மன்மோகன்சிங் அரசில்
சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தார் ஆ ராசா.
அவர் ஸ்டெர்லைட்டின் உற்பத்தி அதிகரிப்புக்கு
(391 டன்னில் இருந்து 900 டன்னாக உயர்த்துவதற்கு)
தயக்கமின்றி அனுமதி அளித்தார்.
12) ஆ ராசாவே அனுமதி வழங்கிய பின்,
ஜெயலலிதாவுக்கு இருந்த தயக்கம் நீங்கியது.
இதன் மூலம் ஸ்டெர்லைட்டுக்கு தான் அனுமதி
வழங்கினால், திமுக எதிர்த்துப் பிரச்சாரம் செய்யாது
என்ற நிலை உருவானதை உணர்ந்த ஜெயலலிதா
900 டன் என்னும் அதிகரித்த உற்பத்திக்கு அனுமதி
தந்தார்.
13) தூத்துக்குடி மக்களுக்கு பெரும் பாதிப்புகளை
ஏற்படுத்தும் இந்த மோசமான முடிவை ஜெயாவும்
ஆ ராசாவும் சேர்ந்தே எடுத்தனர். இன்று ஏற்பட்டுள்ள
சூழல் மாசுக்கும் நோய்களுக்கும் இந்த முடிவே
காரணம்.
14) இந்த வரலாறு போராடும் தூத்துக்குடி மக்களுக்கும்
போராட்டக் கமிட்டிக்கும் தெரியும். பிறபகுதி
மக்களுக்குத் தெரியாது. எனவேதான் எந்த ஒரு
அரசியல் கட்சியையும் நம்பி மக்கள் போராடவில்லை.
எல்லோருமே ஸ்டெர்லைட்டுக்கு போராளிகளைக்
காட்டிக் கொடுக்கும் கயவர்கள் என்று மக்கள்
தெளிவாக இருந்தனர்.
15) துப்பாக்கியால் சுடுவதற்கும் கைது செய்வதற்கும்
ஒரு பட்டியல் போலீசிடம் உள்ளது. இது உளவுத்துறை
தயாரித்த பட்டியல் அல்ல. ஸ்டெர்லைட் நிர்வாகம்
போலீசுக்கு வழங்கிய பட்டியல்.
16) ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு இந்தப் பட்டியலைத்
தயாரித்துக் கொடுத்தவர்கள் யார் தெரியுமா?
வேறு யார்? ஸ்டெர்லைட்டிடம் காசு வாங்கிய உள்ளூர்
அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்தான்.
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக