சனி, 26 மே, 2018

ஸ்டெர்லிட்
Air Pollution ஐ முற்றிலும் இல்லாமல் செய்ய வாயுக்களை Absorb செய்யும் Solvent Circulation Tower கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாயுவையும் கரைக்கத் தகுதியான Solvent கள் உண்டு. நான் பணியாற்றிய Chloro-Alkali தொழிற்சாலையில் இல்லாத விஷ வாயுக்களே இல்லை. அவைகளைக் கரைக்கும் Tower கள் அமைக்கப்பெற்று சுத்தமான காற்றைத்தான் வெளிவிட்டோம். ஒரே ஒரு தரம் Gasket Failure காரணமாய் வாயு வெளியேறிய போது அரசாங்கம் எங்களை மூடச் சொல்லவில்லை. அப்படி மீண்டும் ஆகாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று சோதித்து மீண்டும் தொழிற்சாலை ஓட வகை செய்தது.
சயனைடைக் கழிவாக வெளியேற்றும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. நேராகக் குழாய் மூலம் நடுக் கடலில் அவை Pump செய்கின்றன! எல்லா ரசாயனத் தொழிற்சாலையிலும் திட, திரவ, வாயுக் கழிவுகள் உண்டு. அவற்றைச் சரியானபடி Treat செய்தும், மக்களுக்கு ஆபத்தில்லாத இடத்தில் வெளியேற்றுவதுமே எல்லாத் தொழிற்சாலைகளும் செய்யும் வேலை.
ஆபத்தான கழிவுப் பொருட்கள் இருக்கும் தொழிற்சாலைகள் மூடப் படவேண்டும் என்றால் அநேகமாய் ரசாயனத் தொழிற்சாலைகளே இருக்கா.
ஒரு தொழிற்சாலையை நம்பி அதில் பணியாற்றும் நேரடித் தொழிலாளர்கள் மாத்திரம் இல்லை; தொடர்பான தொழிற்சாலைகளின் ஏராளமான தொழிலாளர்களும் உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக