வெள்ளி, 4 மே, 2018

பொருளை மறுக்கும் அத்வைதமும்
பொருளை  ஏற்கும் மார்க்சியமும்!
----------------------------------------------------------------
1) அத்வைதம் என்பது பொருளை மறுக்கும் ஒரு தத்துவம்.
அது மிகச் சரியாகவே பொருள்மறுப்புத் தத்துவம்
(immaterialism) என்று அழைக்கப் படுகிறது.

2) நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்பது இயங்கியல்
விதிகளில் ஒன்று. இயங்கியலின் விதிகள் வளர்ச்சி
குறித்த விதிகள் ஆகும் (laws of growth).

3) விதை என்பது ஒரு நிலை. துளிர் என்பது ஒரு நிலை.
இவ்விரண்டுமே பொருளின் நிலைகள்.விதை என்கிற
நிலையை மறுத்து துளிர் என்கிற நிலை தோன்றுகிறது.
இதுதான் நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆகும்.

4) நிலைமறுப்பின் நிலைமறுப்பில் பொருள் மறுக்கப்
படுவதில்லை. மாறாக, பொருளின் ஒரு நிலை மறுக்கப்பட்டு
அதனினும் முன்னேறிய வேறொரு நிலை புதிதாகத்
தோன்றுகிறது.

5) எனவே இயங்கியலில் பொருளை மறுத்தல் என்ற
பேச்சுக்கே இடமில்லை.

6) அத்வைதம் கராறாகவும் தெளிவாகவும் பொருளை
பொருளின் இருப்பை மறுக்கிறது.

7) இயங்கியலும் அத்வைதமும் எதிர் எதிர் துருவங்களில்
நின்று கொண்டுள்ளன.

8) எனவே "இயங்கியலும்  பொருளை மறுக்கிறது;
அத்வைதமும் பொருளை மறுக்கிறது" என்று
கூறுவது முழுப்பொய் ஆகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக