திங்கள், 28 மே, 2018

நஷ்டஈடு கேட்க வேண்டும் என்ற
எண்ணம் இல்லையா?
---------------------------------------------------------------
ஒரு தொழிற்சாலை சுற்றுச் சூழலை மாசு
படுத்துமானால் அதற்கான நஷ்ட ஈட்டை
அந்த ஆளை கொடுக்க வேண்டும். இது
உலகம் முழுவதும் உள்ள சட்டம்.

ஸ்டெர்லைட் சூழலை மாசு படுத்துகிறது.
அதனிடம் நஷ்டஈடு கேட்க்க வேண்டும் என்ற
சிந்தனை கூட இல்லாத சமுதாயத்தில் நாம்
வாழ்ந்து வருகிறோம்.

ஒரு ரயில் விபத்து நடந்ல், ரயில்வே நிர்வாகம்
மரணம் அடைந்தோரின் குடும்பத்தார்க்கு இழப்பீடு
வழங்குவதை நாம் நன்கறிவோம். அது ரயில்வேயின்
கடமை. அதே போல, சுற்றுச் சூழல் மாசு படுவது
என்பதும் விபத்து போன்றதே. அதற்குரிய இழப்பீட்டை
ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்க வேண்டும்.

ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ 5000 கோடி நஷ்ட ஈடு
தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்ச் சமூகம்
முன்வைக்க வேண்டும். தமிழக அரசு உச்சநீதி
மன்றத்தில் ஸ்டெர்லைட்  வழக்குத் தொடர வேண்டும்.

சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட் நிறுவன
அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து
சிறை தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

இதைச் செய்ய எந்த அரசியல் கட்சியும் முன்வராது.
மக்கள்தான் செய்ய வேண்டும்.
*************************************************************   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக