வெள்ளி, 4 மே, 2018

சுஜாதா குறித்த காய்தல் உவத்தலற்ற
விமர்சனம்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் அச்சிடப்பட்ட நூல்களின் வருகையானது
வாசிப்பைப் பரவலாக்கியது. என்றாலும் அச்சிடுதல்
தொடங்கியதுமே அறிவியல் நூல்கள் வந்து விடவில்லை.
அச்சு சகாப்தத்தின் கடைசி வருகையாகவே
தமிழில் அறிவியல் நூல்கள் வரத் தொடங்கின.

பேராசிரியர் ந சுப்பு ரெட்டியார் தமிழில் காத்திரமான
அறிவியல் கட்டுரைகளை எழுதியவரில் குறிப்பிடத்
தக்கவர். எனினும் இவரின் எழுத்துக்கள் அன்றைய
சூழலில் சராசரி வாசகனைச் சென்றடையவில்லை.

பின்னர் பெ நா அப்புசாமி வெகுஜன இதழ்களில்
அறிவியல் கட்டுரைகள் எழுதினார். கோவையில்
இருந்து கலைக்கதிர் என்ற அறிவியல் இதழைக்
கொண்டு வந்தார் பொறியாளர் ஜி ஆர் தாமோதரன்.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி கல்லூரிகளில்
கலைக்கதிர் இதழ் தருவிக்கப் பட்டது. கலைக்கதிரும்
பெ நா அப்புசாமியும் 1960, 70களில் அறிவியலின்
அடையாளங்களாகக் கருதப் பட்டனர். என்றாலும்
அறிவியல் ஆர்வலர்களிடம் மட்டுமே  இவை
செல்வாக்குப் பெற்றிருந்தன. சராசரி வாசகனைச்
சென்றடையவில்லை.

இந்த நிலையை மாற்றியவர் சுஜாதா மட்டுமே.
1970களில் தொடங்கி 2010 வரை சுமார் 40 ஆண்டு காலத்தில்
தமிழ் வாசக உலகில் அறிவியலைப் படுபாமரனுக்கும்
கொண்டு சேர்த்தவர் சுஜாதா. குப்பனும் சுப்பனும்
துலுக்காணமும் சுஜாதா மூலமாகவே அறிவியலை
அறிந்து கொண்டனர். மொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும்
அறிவியலை அறிமுகப் படுத்தியதும், அறிவியல்
விழிப்புணர்வை ஏற்படுத்தியதும் சுஜாதாவின்
பங்களிப்பாகும். இதன் விளைவாக தமிழ் அறிவியலின்
அடையாளமாக ஆகிப்போனார் சுஜாதா.

சுப்பு ரெட்டியார், பெ நா அப்புசாமி, ஜி ஆர் தாமோதரன்
ஆகியோர் தமிழில் அறிவியல் என்னும் துறையில்
முன்னோடிகள் என்றால், சுஜாதா அறிவியலைப்
பரவலாக்கியவர். தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டுக்
கொண்டே இருந்த அறிவியலை, எவராலும் புறக்கணிக்க
முடியாத நிலைக்கு உயர்த்தியவர் சுஜாதா.தமிழ்
எழுத்துலகம் அறிவியலை இனி ஒருபோதும்
புறக்கணிக்க இயலாது என்ற நிலையை
ஏற்படுத்தியவர் சுஜாதா.

அவர்  எழுதியவற்றில் மிகுதியும் துப்பறியும்
நாவல்களே. இவை ஒவ்வொன்றும் ஒரு அறிவியல்
கோட்பாட்டை நடைமுறை சார்ந்து விளக்குபவை.
"கொலையுதிர்காலம்" என்ற அவரின் நாவலை பலர்
வாசித்திருக்கலாம். இது ஒரு வார இதழில்
தொடராகவும் வெளிவந்தது. இந்த நாவல் முற்ற
முழுக்க ஹோலோகிராம் (Hologram) என்னும்
அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய விளக்கம்
ஆகும்.

இன்று, இந்த 2018இல்,.ஹோலோகிராம் பற்றி
தமிழ்நாட்டின் கடைசித் தற்குறி கூட அறிவான்.
"போலிகளை வாங்கி ஏமாறாதீர்கள்; எங்களின்
நிரோத் பாக்கட்டில் உள்ள ஹோலோகிராமைப்
பார்த்து வாங்குங்கள்" என்று நிரோத் கம்பெனிகள்
விளம்பரம் கொடுக்கும் காலம் இது. ஆனால் சுஜாதா
கொலையுதிர்காலம் எழுதிய 1980களில்
ஹோலோகிராம் பற்றித் தெரிந்தவர்களை விரல்
விட்டு எண்ணி விடலாம். ஆக காலத்தை மீறிச்
சிந்தித்தவர் சுஜாதா  என்பதை அறியலாம்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பற்றி அவர்
எழுதிய நூல் யார் எவருக்கும் புரியும் விதத்தில்
எளிமையாக அமைந்த ஒன்றாகும்.

அவரின் உரைநடை எலக்ட்ரானின் வேகத்தைக்
கொண்டது."சற்று முன் 50 காசுக்கு  வாங்கிய  
மக்கள் குரலில் மூழ்கி இருந்தான் அந்தக் குருட்டுப்
பிச்சைக்காரன்" என்று ஒற்றை வரியில் பல
வாக்கியங்களை உள்ளடக்கும் விந்தை
சுஜாதாவுக்கு மட்டுமே கைவந்த கலை.

தமிழ் எழுத்துலகம் மிகவும் பழமைவாதச்
சிந்தனையில் மூழ்கி இறுகிக் கிடப்பது.
அறிவியல் எழுத்தாளரை எழுத்தாளராகவே
அங்கீகரிக்க மறுக்கும் அறிவற்ற மூடர்களின்
கூடாரமாகவே தமிழ் எழுத்துலகம் உள்ளது.
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன்,
ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோரின்
வரிசையில் சுஜாதாவை வைக்க மறுக்கிறது
தமிழ் எழுத்துலகம். இது முறியடிக்கப்பட
வேண்டிய பழமைச் சிந்தனை.

இந்திய அரசு சுஜாதாவுக்கு ஒரு பத்மஸ்ரீ விருதைக்
கூட வழங்கவில்லை என்பது இந்திய அரசுக்கு இழுக்கு.
போனால்  போகிறதென்று ஒரு கலைமாமணியை
சுஜாதாவுக்கு  வழங்கித் தன் கடமையை முடித்துக்
கொண்டது தமிழக அரசு. அறிவியல் எழுத்துக்கான
வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு முற்றிலும்
தகுதி படைத்த ஒரே நபர் சுஜாதா மட்டுமே.
என்றாலும் மத்திய மாநில அரசுகளோ சாஹித்ய
அகாடமி போன்ற தனியார் நிறுவனங்களோ அவரின்
மேதைமையைக் கெளரவிக்கத் தவறின. எந்தவொரு
தமிழகப் பல்கலைக் கழகமும் அவருக்கு ஒரு
கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வரவில்லை
என்பது தமிழ்நாட்டுக்குத் தீராத களங்கம்.

மூணாங்கிளாஸ் பெயிலாப்போன ராமச்சந்திர
மேனன், மற்றும் பல்வேறு சினிமா உலகத்
தற்குறிகளுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய
தமிழகப்  பல்கலைக் கழகங்கள் சுஜாதாவுக்கு
வழங்க முன்வரவில்லை. இதுதான் தமிழகப்
பல்கலைகளின் தரம்.

முற்றிலும் அறிவியலுக்கு எதிரான நச்சுச் சூழல்
நிலவிய தமிழ் அறிவுலகில் பரந்துபட்ட மக்களிடம்
அறிவியலைக் கொண்டு சென்றவர் சுஜாதா. இதன்
விளைவாகவே இன்று முன்னிலும் காத்திரமான
அறிவியல் எழுத்தை தமிழ் வாசக உலகிற்கு
இன்றைய அறிவியல் எழுத்தாளர்களால் வழங்க
முடிகிறது.

உதாரணமாக, நவீன இயற்பியலின் உச்சமாகக்
கருதப்படும் இழைக்கொள்கை (string theory) குறித்து
கடந்த ஆண்டு அறிவியல் ஒளி ஆண்டு மலரில் ஒரு
கட்டுரை வெளிவந்தது. நியூட்டன் அறிவியல் மன்றம்
எழுதிய கட்டுரை அது. உலக அளவில் தமிழில்
இழைக்கொள்கை குறித்து எழுதப்பட்ட முதல்
கட்டுரை அது. அன்று சுஜாதா ஒரு வலுவான அறிவியல்
அடித்தளத்தை ஏற்படுத்தி இருக்காவிட்டால்
இன்று இழைக்கொள்கை பற்றிய இந்தக் கட்டுரையை
எழுதியே இருக்க முடியாது.     

மிகவும் பரவலாக அனைவரிடமும் அறிவியலைக்
கொண்டு சேர்ப்பதில் அதற்கே உரிய இடர்ப்பாடும்
உள்ளது. உள்ளடக்கத்தைப் பெருமளவு நீர்த்துப்
போகச் செய்தால் மட்டுமே அனைவரிடமும்
அறிவியலைக் கொண்டு போய்ச சேர்க்க இயலும்.
Targeted audienceக்குச் சொல்லத்தக்க விஷயங்களை
General audienceஇடம் சொல்லி விட முடியாது. அதாவது
ஆழ உழுதல் இயலாது; அகல உழுதல் மட்டுமே இயலும்.
இதை வணிக இதழ்களிலும் ஜனரஞ்சக இதழ்களிலும்
எழுதி வந்த சுஜாதா நன்கு உணர்ந்து இருந்தார்.
எனவே மேலும் காத்திரமான அறிவியல் எழுத்தை
எழுத அவர் விரும்பினாலும், வணிக இதழ்களின்
வரம்புகள் அவரை அனுமதிக்கவில்லை.

இது சுஜாதாவின் குறைபாடு அல்ல. ஏனெனில் அவர்
காலத்தின் விளைபொருள். வரப்பின் உயரத்திற்கு
ஏற்பவே நீர் பாய்ச்ச முடியும். வரப்பின் உயரத்தை மீறிப்
பாய்ச்சப்படும் நீர் பயிருக்குப் பயன்படாமல் வீணே
வெளியேறும். எனவே சுஜாதாவின் அறிவியல்
ஆழமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு
அவர் பொறுப்பாக மாட்டார். தான் ஒருவன் பத்தடி
முன்வைப்பதை விட, அனைவரையும் சேர்த்துக்
கொண்டு ஓரடி வைப்பதே தமிழ்ச் சூழலில் அவர்
காலத்தில் சாத்தியம், இந்தச் சாத்தியப்பாட்டை
முழுவதுமாக வெற்றிகரமாகச் செயலாக்கியவர் சுஜாதா.

சுஜாதா வாழ்ந்த காலத்தில் அவர் மீதான
எதிர்மறையான விமர்சனம் எதுவும் பெரிதாக இல்லை.
எந்தத் தரப்பையும் பகைக்காத சுஜாதா, எந்தத்
தரப்பாலும் தாக்குதலுக்கு உள்ளாகவும் இல்லை.
இன்று கனிமொழியின் தந்தை யார் என்ற சர்ச்சை
எழுந்துள்ளது. ஆனால் அன்று கனிமொழி, சுஜாதாவின்
வளர்ப்பு மகள் போன்றே அவர் வீட்டில் வளர்ந்தார்.
தமது நேரத்தில் கணிசமான பகுதியை சுஜாதாவுடன்
கழித்தவர் கனிமொழி.

ஆனால் 2014இல் மோடி பிரதமர் ஆனவுடன், சுஜாதா
மீதான இழிந்த அவதூறுகள் தலையெடுக்கத்
தொடங்கி உள்ளன. சாதித் தொழுநோய் பீடித்த,
மூளையில் சீழும் புழுவும் நெளிகிற கருவின்
குற்றங்களும், சாதி மலத்தை வாய் நுரைக்கத்
தின்று கழிக்கிற இழிஞர் கூட்டமும் சுஜாதாவை
சாதிக் காழ்ப்புடன் வசைபாடுகின்றன.

இந்தக் கும்பலிடம் சுஜாதா பற்றிய எந்த விமர்சனமும்
இல்லை. ஆனால் அவதூறுகளை வீசுகின்றது
இந்தக் கும்பல். அறிவியலோடு ஸ்நானப் பிராப்தி
எதுவுமற்ற இந்தக் கும்பலுக்கு வசைபாட மட்டுமே
தெரியும். இது சூரியனைப் பார்த்து நாய் குரைப்பது
போன்றதாகும். 

a plus b whole squared என்றால் என்னவென்றே தெரியாத
புழுவினும் இழிந்த இத் தொழுநோயாளிகள் 
சுஜாதா மீது அவதூறு மொழிவதும், தங்கள் புண்ணுமிழ்
குருதியை வழித்துத் தின்பதும் ஒன்றே!

சுஜாதா பற்றிய இக்கட்டுரை மட்டுமே அவர் மீதான
விமர்சனப் பார்வையைக் கொண்டது. ஒரு அறிவியல்
எழுத்தாளரை அறிவியலோடு தொடர்பு  உடையவர்களால்
மட்டுமே சரியாக மதிப்பிட முடியும். அறிவியலில் இருந்து
துண்டித்துக் கொண்டு நிற்கும் இழிஞர்கள் இது பற்றிக்
கருத்துக்கூறும் அருகதை அற்றவர்கள்.

The dog barks; but the caravan passes on.
*****************************************************         







   
 
   






    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக