வியாழன், 24 மே, 2018

தன்னெழுச்சியான போராட்டங்கள் (spontaneous struggles)
குறித்து "என்ன செய்ய வேண்டும்?" என்ற தமது
புகழ் பெற்ற நூலில் லெனின் எழுதி உள்ளார். அதை
வழிகாட்டும் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளலாம்.

புத்ததேவ் அரசின் கொடுமைகள் மற்றும்
மார்க்சிஸ்ட் லும்பன்களின் கயமைகள் குறித்து
இந்தியா முழுவதும் உள்ள எல்லா ஏடுகளிலும்
(வங்க மொழி, ஆங்கிலம், இந்தி முதலியன)
 இச்செய்திகள் வெளிவந்து அனைவராலும்
படிக்கப்பட்டு விட்டனவே. இது குறித்து பல
மொழிகளில் நிறைய நூல்கள் எழுதப்பட்டு
அவை விற்கப்பட்டு விட்டன. தமிழில் அ மார்க்ஸ் கூட
ஒரு புத்தகம் எழுதி இருப்பதாக நினைவு. 

தோழரே,
ஸ்டாலினிசம் என்ற வகைமையை
(classification) மார்க்சியம் ஏற்பதில்லை. அது டிராட்ஸ்கிய
நண்பர்களின் வகைப்பாடு. தமிழகம் முழுவதும்
இடதுசாரி மற்றும் பொது வாசகத் தளத்தில்
மார்க்சிஸ்ட்  CPM கட்சி ஒரு போலிக் கம்யூனிஸ்ட்
கட்சி என்ற உண்மை வெகுகாலத்துக்கு முன்பே
நிறுவப்பட்டு விட்டது. வலது இடதுகள் (CPI,CPM)
என்றாலே போலிக் கம்யூனிஸ்டுகள் என்பதை
ஒவ்வொரு முறையும் குறிப்பிடத் தேவையில்லை.
ஒவ்வொரு பத்தி (para) எழுதும்போது பிள்ளையார் சுழி
 ஸ்ரீராமஜெயம் எழுத வேண்டிய அவசியம் இல்லை.
இந்தக் கட்டுரை போலிக் கம்யூனிஸ்டுகளான
மார்க்சிஸ்ட் கட்சியை அம்பலப் படுத்துகிறது. ம்

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக