புதன், 30 மே, 2018

ஸ்டெர்லைட்
இப்சனும் ரேயும்: சமூகவிரோதிகளை முன்வைத்தவர்கள்
=========================== ======== ===================
இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நாடகங்கள் ஹென்ரிக் இப்சனின் நாடகங்கள் மொழிபெயர்ப்பாகி இருக்கின்றன. அவர் நார்வேஜிய மொழியில் எழுதிய நாடகம் ஆங்கிலத்தில் -An Enemy of the People . அதைத் தமிழில் ‘மக்களின் பகைவன்’ எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றிருக்கிறது. ஏறத்தாழ ஸ்டெரிலைட்டும் போல ஒரு தொழில் நகரத்தின் கதைதான். இங்கே தாமிர உருக்காலை; அங்கே தோல் தொழிற்சாலை.
அந்நாடகத்தின் மைய விவாதம் ’தோல் தொழிற்சாலை வெளியேற்றும் கழிவு நீர்’ நகரத்தில் பரவும் நோய்க்குக் காரணமாக இருக்கிறது. அதனை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பவர் டாக்டர் ஸ்டோக்மேன். அறிக்கையை வாங்கி நடவடிக்கை எடுக்க வேண்டியவர் அவரது அண்ணன் பீட்டர். அவரோ தொழிற்சாலை முதலாளிக்கு ஆதரவாக நின்று, டாக்டர் ஸ்டோக்மேனை மக்கள் விரோதி எனத் திருப்பிவிடுகிறார். அவரோடு சேர்ந்து பத்திரிகை உதவுகிறது. மக்கள் முன் பேசநினைத்து மேடைபோட்டு நிற்கும்போது சாதுரியமான உரையால் மக்களைக் கல்லெறியத்தூண்டுகிறார். டாக்டர் ஊரைவிட்டு வெளியேறுவார்.
இந்த நாடகத்தைச் சத்யஜித்ரே ஜனசத்ரு என்று சினிமாவாகத் தந்துள்ளார்.ஜனசத்ருவில் தோல்தொழிற்சாலைக்குப் பதில் நகரத்தின் மையத்தில் இருக்கும் கோயில் குளமும் அதன் புனிதநீரும். அதுவே பரவும் கொள்ளை நோய்க்குக்காரணம்.
எது சமூகவிரோதம்? யார் சமூகவிரோதி? இப்சனைப் படித்துப் புரிந்துகொள்ளலாம்; சத்யஜித்ரேயின் படத்தைப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக