திங்கள், 21 மே, 2018

மார்க்சியர்கள் கவனத்திற்கு!
குதிரையை யானை என்று அழைக்கக் கூடாது!
Dialectics என்ற சொல்லுக்குச் சரியான மொழிபெயர்ப்பு
முரண் தர்க்கவியல் என்பதே!
இயங்கியல், இயக்கவியல் போன்ற பொருந்தாச் 
சொற்களுக்கு முடிவு கட்டுவோம்!
---------------------------------------------------------------------------------------
1) Dialectics என்பதன் மூலச்சொல் ஒரு கிரேக்கச் சொல் ஆகும்.

2) இதன் தமிழ் மொழிபெயர்ப்பாக இயங்கியல்,
இயக்கவியல் ஆகிய சொற்கள் புழக்கத்தில் உள்ளன.

3) இச்சொற்கள் dialectics என்ற சொல்லின் சரியான
மொழிபெயர்ப்பாக இல்லை. தவறான பொருளைத்
தருகின்றன. எனவே இவற்றைக் கைவிட்டு சரியான
துல்லியமான தமிழ்ச்சொல்லை உருவாக்க வேண்டிய
தேவை உள்ளது.

4) Dialectics என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல்
முரண் தர்க்கவியல் என்பதாகும். இந்தச் சொல்லை
அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறோம்.

5) Dialectics என்ற சொல்லில் உள்ள di என்பது ஒரு முன்னொட்டு
(prefix). இதற்கு இரண்டு என்று பொருள். கார்பன் டை
ஆக்ஸைடு என்றால் (CO2) இரண்டு ஆக்சிஜன்
அணுக்கள் என்பது நாம் அறிந்ததே.

6) கணிதத்தில்  lemma என்றால் முன்வைப்பு (proposition)
என்று பொருள். இதில் இருந்துதான் dilemma என்ற சொல்
வருகிறது.

7) Dialectics என்ற சொல்லில் உள்ள di என்பது இரண்டு
என்று பொருள்படும். ஒன்றுக்கொன்று முரண்பட்ட
இரண்டு கருத்துகளை இது குறிக்கிறது.

8) பொருள்முதல்வாதம் மார்க்சுக்கு முன்பே இருந்தது.
அது குறைந்தது 3000 ஆண்டுத் தொன்மை மிக்கது.

8) அது போலவே, dialectics என்பதும் மார்க்சுக்கு முன்னரே
இருந்து வந்தது. குறைந்தது 2000 ஆண்டுப் பழமை
மிக்கது. சாக்ரட்டீசுக்கு முன்பே டயலெக்டிக்ஸ்
இருந்தது. கீழ்த்திசைத் தத்துவ ஞானத்திலும்
(oriental philosophy) 2000 ஆண்டுக்கு முன்னரே டயலெக்டிக்ஸ்
இருந்து வந்தது. பௌத்தத் தத்துவஞானிகள்
டயலக்டிக்சைப் பயன்படுத்தி இருந்தனர். சீனத்திலும்
டயலக்டிக்ஸ் பயன்பாட்டில் இருந்தது.

9) பொருள்முதல்வாதமும் சரி, டயலெக்டிக்சம் சரி
காலந்தோறும் வளர்ந்து கொண்டே இருந்தவை.

10) கருவிகளின் வெர்ஷன்கள் மாற மாற, கருவிகள்
முன்னிலும் மேம்பாடு அடைவதைப் போல,
டயலெக்டிக்சும் மாறி வரும் வெர்ஷன்களில்
மேம்பாடு அடைந்து கொண்டே வந்தது.

11) ஆரம்பகால ப்ளூ டூத் (BlueTooth) கருவியின் வீச்சு (range)
ஒரு மீட்டர்தான். இன்றைய லேட்டஸ்ட் BlueTooth version 5.0ன்
வீச்சு 400 மீட்டர் ஆகும். இதை போலவே டயலெக்டிக்சும்
மேம்பாடு அடைந்து கொண்டே .வந்துள்ளது.

12) சாக்ரட்டீசின் வெர்ஷனை விட, ஜெர்மானிய
அறிஞர் ஹெக்கலின் டயலெக்டிக்ஸ்  (Hegel's version)
மேம்பட்டது. அதை விட மார்க்சின் வெர்ஷன்
மேம்பட்டது.

13) டயலக்டிக்ஸ் என்பது ஒரு தத்துவம் அல்ல.
(Dialectics is NOT a philosophy). அது உண்மையைக்
கண்டறியும் ஒரு முறை. இது தெரியாமல் மிகப்
பலரும் டயலெக்டிக்ஸ் என்பது ஒரு தத்துவம்
என்ற தவறான புரிதலில் ஆண்டுக் கணக்காக
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

14) டயலெக்டிக்ஸ் என்பது முரண்பட்ட கருத்துக்களை
மோத விடுவதன் மூலம் உண்மையைக் கண்டறியும்
ஒரு முறையாகும். அதில் இயக்கம் (motion) என்பதற்கு
எந்த விதமான இடமும் இல்லை. எனவே dialectics
என்ற சொல்லை இயக்கவியல் என்று மொழிபெயர்ப்பது
முற்றிலும் தவறானது.

15) சாக்ரட்டீஸ் dialectics என்ற சொல்லைப்
பயன்படுத்தினார். அதே சொல்லையே ஹெக்கலும்
பயன்படுத்தினார். அதே சொல்லையே மார்க்சும்
பயன்படுத்தினார் என்பது இங்கு கருதத் தக்கது.

16) ஹெக்கலின் டயலெக்டிக்சை தனக்கு ஏற்றவாறு
மாற்றிக் கொண்ட மார்க்ஸ், டயலெக்டிக்ஸ் என்ற
சொல்லை மாற்றவில்லை.

17) எனவே dialectics என்ற சொல்லுக்குரிய சரியான
மொழிபெயர்ப்பு முரண் தர்க்கவியல் என்ற சொல்லே
என்பதை இக்கட்டுரையில் நிரூபித்துள்ளோம்.

18) Semantics என்ற ஓர் அறிவுத்துறை உண்டு.
சொற்பொருள் இயல் என்று இதற்குப் பொருள்.
சொற்களின் பிறப்பியல் என்றும் ஓர் அறிவுத்துறை
உண்டு. இத்துறைகளில் ஓரளவு அடிப்படையான
பரிச்சயம் இருப்பவர்களால் இக்கட்டுரையை
எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

19) சரியான மொழிபெயர்ப்புக்கான தொடர்ச்சியான
போராட்டத்தின் ஒரு பகுதியே இக்கட்டுரை.
******************************************************* 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக