பெரியகுளம் பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 24/04/2018 அன்று ஒரு தலித் பெண்மணி இறந்து விட்டார். அவரின் இறுதி சடங்குகளுக்காக மயானத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி வழியாக அவரின் உடல் எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வழியே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவரின் உடல் செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வன்முறை வெடித்தது. காவல்துறையினரின் தலையீட்டால் இடுகாட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருவதோடு, நேற்று கலவரம் வெடித்துள்ளது.
டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய 'விசாவுக்காக காத்திருக்கிறேன்' என்ற நூலில், தான் தவுலாபாத் என்ற நிஜாமின் கோட்டை முகப்பில் உள்ள குளத்தின் நீரை உபயோகித்தபோது முகமதியர்களால் தாக்கப்பட்டது குறித்தும், ஹிந்து மதத்தில் மட்டுமல்ல, இஸ்லாத்திலும் தீண்டாமை உள்ளது என்று எழுதியிருப்பதாக நான் குறிப்பிட்டு சொன்னபோதெல்லாம் பொங்கியெழுந்த முற்போக்குகளும், பிற்போக்குகளும், பெரியகுளத்தில் நடந்துள்ள தீண்டாமை கொடுமை குறித்து வாய்மூடி மவுனியாக இருப்பதன் காரணம் என்ன?
இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி வழியாக தலித் சமுதாயத்தை சேர்ந்தவரின் உடல் செல்லக்கூடாது என்ற இல்லாத சட்டத்தை இயற்றியது யார்? தீண்டாமை வேற்று மதத்தினாரால் கடைபிடிக்கப்பட்டால், திருமாவளவன், சுப. வீரபாண்டியன் போன்றோரும்,கம்யூனிஸ்டுகளும், பகுத்தறிவு பகலவன்களும், போலி மதசார்பின்மை காங்கிரஸும் ஏற்றுக்கொண்டு அமைதி காப்பதின் ரகசியம் என்ன? ஓட்டுக்காக தீண்டாமையை ஆதரிக்கும் இவர்களுக்கு ஹிந்துத்துவம் குறித்து பேச தகுதியுள்ளதா?
ஊடகங்கள் இந்த கேள்வியை அவர்களிடம் கேட்காததன் மர்மம் என்ன? விவாதமாகுமா பொம்மிநாயக்கன்பட்டி விவகாரம்? வேலூர் மாவட்டம் விஷாரமாகிறதா பொம்மிநாயக்கன்பட்டி?
காலம் பதில் சொல்லும். காத்திருப்போம் Narayanan Thiruppathi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக