புதன், 30 மே, 2018

புழுவினும் இழிந்த எடப்பாடியை
சட்ட மன்றத்தில் மடக்கி அம்பலப் படுத்தாமல்
ஓடிப் போகிறவன் லூசு கோமாளி மட்டுமல்ல
கோழைப்பயலும் ஆவான். 

ப சிதம்பரம் கைது செய்யப் படுகிறார்!
திகார் சிறையில் அவருக்காக வசதியான  
ஒரு அறை தயார் ஆகிறது! எல்லா வழக்கிலும்
முன்ஜாமீன் கிடைக்குமா? 

ப சிதம்பரம் முன்ஜாமீனுக்கு அலைகிற
அலைச்சலும் செலவழிக்கிற பணமும் பற்றி
எந்த தேசிய ஊடகமும் விவாதம் நடத்தாது.
எந்தத் தமிழ் ஊடகமும் விவாதம் நடத்தாது.
ஊடகப் பெருச்சாளிகள் அனைவருக்கும்
பெருந்தொகை பட்டுவாடா ஆகி விட்டது. 



கூத்தாடி ரஜனியின் மீது
மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை!
-----------------------------------------------------------------
புழுவினும் இழிந்த கூத்தாடி ரஜனிக்கு
உண்மையில் மக்கள் மத்தியில் செல்வாக்கு
இருக்கிறது. தூத்துக்குடி மக்கள் அவருடைய
வருகையை விரும்பினார்கள். அவரிடம் தங்களின்
குறையைச் சொல்ல வேண்டும் என்றும் அவர்
ஏதேனும் தீர்வு தருவார் என்றும் தூத்துக்குடி
மக்கள் கருதினர்.

ஆக மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராக
கூத்தாடி ரஜனி இருக்கிறார் என்பது உண்மை.
ஆனால் புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவம்
இந்த உண்மையைக் காண மறுத்து சுய இன்பம்
அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டின் மிகப்பெரும் இழிவு என்பது கூத்தாடிப்
பயல்களைத் தலைவராகவும் முதல்வராகவும்
ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை. மேனன், ஜெயா,
வி என் ஜானகி ஆகியோர் முதல்வர்களாக இருந்த
இழிவு தமிழ்நாட்டுக்குச் சொந்தம். அண்ணாவும்
கலைஞரும் கூட திரைத்துறையைச் சார்ந்தவர்கள்தாம்.
இவையெல்லாம் கசப்பான உண்மைகள்.

அமைதியாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில்
சமூக விரோதிகள் புகுந்து வன்முறையை
ஏற்படுத்தி விட்டார்கள் என்று அழுத்தம்
திருத்தமாகக் கூறுகிறார் ரஜனி.

போலிஸைத் தாக்கியது, கலெக்டர் அலுவலகத்தை
தீ வைத்து எரித்தது, ஸ்டெர்லைட் ஊழியர்களின்
குடியிருப்பைத் தீவைத்து எரித்தது ஆகிய
நிகழ்வுகளுக்கும் பொது மக்களுக்கும் எவ்வித
சம்பந்தமும் இல்லை என்கிறார் ரஜனி.

ரஜனியின் இந்தக் கருத்துக்கு தூத்துக்குடி
மக்கள் என்ன எதிர்வினை ஆற்றுகிறார்கள்
என்பதை கவனிக்க வேண்டும். இந்தக்
கருத்துக்களுக்கு தூத்துக்குடி மக்களிடம்
கடுமையான எதிர்வினை இருக்குமேயானால்
ரஜனியின்  ஆட்டம் விரைவில் முடிந்து விடும்.

ஆனால், ரஜனியின் கருத்துக்கு தூத்துக்குடி
மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு
ஏற்படவில்லை என்றால், ரஜனியின் செல்வாக்கிற்கு
எவ்வித பந்தமும் இல்லை என்று உணரலாம்.

பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம் இது.
----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: தூத்துக்குடி மக்களின் எதிர்வினை
மட்டுமே இதில் கவனம் கொள்ளப்பட வேண்டும்.
சுயஇன்பம் அனுபவிக்கும் குட்டி முதலாளித்துவ
லும்பன்களின் கருத்து பைசா பெறாது!  
*********************************************************

புழுவினும் இழிந்த ரஜனியை
வளர்த்து விட்ட குற்றவாளிகள்
A1 கலைஞர், A2 மூப்பனார், A3 ப சிதம்பரம்.
ரஜனியைக் காயடித்தவர்கள் 1, ஜெயா 2, Dr ராமதாஸ்.

ரஜனியை ஓட ஓட விரட்டியவர் டாக்டர் ராமதாஸ்.
ரஜனியை அடக்கி ஒடுக்கி முட்டி போடா வைத்தவர்
ஜெயலலிதா. ஆனால் கலைஞரும் மூப்பனாரும்
ப சிதம்பரமும் ரஜனியின் கயமையை நன்கு
அறிந்த பின்னரும், அந்த இழிந்த கூத்தாடியை
வளர்த்து விட்ட குற்றவாளிகள்.

தமிழ்நாட்டை விழுங்கி கபளீகரம் செய்யும்
அளவுக்கு இன்று கூத்தாடி ரஜனி வளர்ந்து
இருக்கிறார் என்றால், இந்த வளர்ச்சிக்கு
அடித்தளம் இட்ட குற்றவாளிகள் மூவர்.
இதில் A1 கலைஞர். A2 மூப்பனார். A3 ப சிதம்பரம்.
இதில் மூப்பனார் மண்டையைப் போட்டு விட்டார்.
கலைஞர் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார்.
சிதம்பரம் எந்த நேரம் திஹார் சிறைக்குப் போக
நேரும் என்று அச்சத்தில் இருக்கிறார்.    

அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில். ஒரு வழக்கில்
கைது செய்யத் தடை வாங்கி உள்ளார். இன்னொன்றில்
முன்ஜாமீனுக்கு அலைகிறார். இன்னமும் கைதாவில்லை.

 
  


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக