செவ்வாய், 8 மே, 2018

(1) நீட் தேர்வு (2018 UG) முக்கியமான புள்ளி விவரங்கள்!
(VITAL STATISTICS) 
---------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
1) நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட
11 மொழிகளில் நடத்தப படுகிறது.

2) நீட் எழுத விண்ணப்பித்தோர் மொத்தம் = 13,26,725
ஆங்கிலம்= 10,60,923 (பத்து லட்சத்தை விட அதிகம்)
இந்தி= 1,46,542 (ஒரு லட்சத்து 46 ஆயிரம் plus )
குஜராத்தி = 57,299 (ஐம்பத்தி ஏழாயிரம் plus)
வங்காளி = 27437 (இருபத்தி ஏழாயிரம் plus)
தமிழ்= 24720 (இருபத்தி நாலாயிரம் plus)
அசாமி =3848
தெலுங்கு 1979
உருது= 1711
மராத்தி= 1169
கன்னடம் -818
ஒரியா = 279
-----------------------------.
மொத்தம் = 13,26,725
---------------------------------
குஜராத்திகளுக்கு தாய்மொழிப்பற்று அதிகம்.
குஜராத்தி மொழியில் மட்டும் ஐம்பத்தி ஏழாயிரம்
மாணவர்கள் நீட் எழுதுகிறார்கள்.

ஆனால் தமிழில் எழுதுவோர் வெறும்
இருபத்தி நாலாயிரம் பேர் மட்டுமே.
தமிழ் தமிழ் என்று கூச்சல் போடும் தமிழ்நாட்டில்
24,000 பேர்தான் தமிழில் எழுதுகிறான். ஆனால்
எந்தக் கூச்சலும் போடாத குஜராத் மாநிலத்தில்
ஐம்பத்தி ஏழாயிரம் பேர் குஜராத்தியில் நீட்
எழுதுகிறான்.

வங்காளியில் இருபத்தி ஏழாயிரம் பேர் நீட்
எழுதுகிறான். இதுவும் தமிழை விட அதிகம்.
பல மாநில மாணவர்கள் சேர்ந்து இந்தியில்
ஒரு லட்சத்து 46ஆயிரம் பேர் எழுதுகிறான்.
-------------------------------------------------------------------------------
தகவல் ஆதாரம்:
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை
இன்று (07.05.2018 2106 hours) வெளியிட்ட 
பத்திரிகைக் குறிப்பு.
*****************************************************


  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக