திங்கள், 28 மே, 2018

நஷ்ட ஈடு (ரூ 5000 கோடி) தராமல் ஸ்டெர்லைட்
தப்பிச் செல்லக் கூடாது!
ஸ்டெரிலைட் மீது கிரிமினல் வழக்கு!
எமது கோரிக்கைக்கு ஆதரவு தாருங்கள் மக்களே!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
1) சுற்றுச் சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட் நிறுவனம்
புனரமைப்புப் பணிகளுக்காக ரூ 5000 கோடி
நஷ்ட ஈடாக தமிழக அரசுக்குத் தர வேண்டும்.

2) தமிழக அரசு ஸ்டெர்லைட் மீது உச்ச நீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்து ரூ 5000 கோடி இழப்பீடு கோரிப்
பெற வேண்டும்.

3) தூத்துக்குடி மக்கள் மீது உண்மையான அக்கறை உடைய
எவரும் இந்தக் கோரிக்கையை உரத்த குரலில்
எழுப்ப வேண்டும்.

4) சுற்றுச்சூழல் அமைப்புகள், போராளிகள் என்று
பலரும் தமிழ்நாட்டில் திரிந்து கொண்டிருந்தாலும்
ஒருவர் கூட இக்கோரிக்கையை எழுப்பவில்லை.
இந்தக் கோணத்தில் அவர்களின் மூளை
சிந்திக்கவில்லை. ஏனெனில் சுற்றுச் சூழல்
"போராளிகள்"அனைவரும் குட்டி முதலாளித்துவ
மற்றும் தாராளவாத முதலாளித்துவ ஆசாமிகள்.
அவர்களுக்கு பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம்
கிடையாது.

5) நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இந்தக்
கோரிக்கையை முதன் முதலில் எழுப்புகிறது.
இதற்காக முதல் குரல் கொடுத்தது நியூட்டன்
அறிவியல் மன்றமே.

6) இந்தியாவில் நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே
அறிவியலோடு மார்க்சிய லெனினியத்தை ஏற்றுக்
கொண்ட ஒரே அமைப்பு. இதனால்தான் பாட்டாளி
வர்க்க நலன் பேணுவது மிக இயல்பாக நியூட்டன்
அறிவியல்  மன்றத்திற்கு எளிதாக சாத்தியம் ஆகிறது.

5) ஒரு தொழிற்சாலையால் சுற்றுச் சூழல் மாசு பட்டால்,
அதற்குரிய நஷ்ட ஈட்டை அந்த நிறுவனம் தர வேண்டும்
என்பது உலகெங்கும் உள்ள சட்டம். இந்தியாவிலும்
அந்தச் சட்டம் .உள்ளது.

6) இந்தச் சட்டப்படி, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்
புறங்களிலும் ,நிலத்தை வளி மண்டலத்தை, நிலத்தடி
நீரை மாசு படுத்தியும் மக்களுக்கு நோய்களை
உண்டாக்கியும் மாபெரும் சூழல் கேட்டுக்கு காரணமான
ஸ்டெர்லைட் நிறுவனம் தண்டிக்கப் பட வேண்டும்.

7) நஷ்ட ஈடு ரூ 5000 கோடி தருவது மட்டுமல்ல, சூழலை
மாசு படுத்திய ஸ்டெர்லைட் நிறுவனத்தின்
அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட
வேண்டும்.

8) எடப்பாடி அரசோ, திமுகவோ, காங்கிரஸ், பாஜக,
 கட்சிகளோ இக்கோரிக்கையை ஒருபோதும்
எழுப்பாது. ஸ்டெர்லைட்டுக்கு ஒரு பைசா நஷ்டம்
கூட ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்
வாங்கிய காசுக்கு அவர்கள் காட்டும் விசுவாசம்.

9) தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்,
முற்போக்காளர்கள், நாடாளுமன்ற இடதுசாரிகள்
என்று ஒருவர் கூட இக்கோரிக்கையை எழுப்பவில்லை
என்பதை மக்கள் உணர வேண்டும்.

10) எனவே அன்பார்ந்த தமிழ் மக்களே,
நியூட்டன் அறிவியல் மன்றம் முன்வைக்கும்
இந்தக் கோரிக்கையான (அ) ரூ 5000 கோடி
நஷ்ட ஈடு (ஆ) சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட்
அதிகாரிகளுக்கு தண்டனை (இ) இதற்காக தமிழக
அரசு வழக்குத்  தொடுப்பது ஆகிய மூன்று
கோரிக்கைகளையும் மக்களிடம் பேரளவில்
கொண்டு செல்லுமாறு நியூட்டன் அறிவியல்
மன்றம் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற நக்சல்பாரிகளால்
மட்டுமே முடியும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
கருதுகிறது.
=================================================
கோரிக்கைகள்:
1) சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட்டே, ரூ 5000 கோடி
இழப்பீடு வழங்கு.
2) தமிழக அரசே, ஸ்டெர்லைட் மீது உச்சநீதி மன்றத்தில்
வழக்குத் தொடர்ந்து இழப்பீடு கேள்.
3)தமிழக அரசே, சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட் அதிகாரிகளைக்
கைது செய்து கிரிமினல் வழக்குத் தொடு. 
*************************************************************   

கசப்பான உண்மை! 100 சதம் உண்மை!

தூத்துக்குடியில் உள்ளூர் கட்சிக்காரர்கள்
அனைவரும் (திமுக, அதிமுக, மதிமுக)
ஸ்டெர்லைட்டிடம் காசு வாங்கியவர்களே.
அனைவரும் ஸ்டெர்லைட்டின் கைத்தடிகளே!
போராட்டக் காரர்களை போலீசுக்கு ஆள் காட்டியதும்
இக்கட்சிக்காரர்களே.  எனவேதான் இவர்களை
தூத்துக்குடி மக்கள் கண்ட இடங்களில் உதைக்க
ஆரம்பித்தார்கள். இதற்குப் பயந்து உள்ளூர்
கட்சிக்காரர்கள் தலைமறைவு ஆகி விட்டார்கள்.
**
எனவே கட்சிக் கொடிக்கம்பங்களை வெட்டிச்
சாய்க்கும்போது, இந்தக் கட்சிக்காரனாவது
தட்டிக் கேட்டானா? ஒரு பயலுக்கும் தட்டிக்
கேட்காத தைரியம் கிடையாது. எல்லோருமே
 ஸ்டெர்லைட்டின் எச்சில் காசு எடுபிடிகளே.

இழப்பீட்டுத் தொகை பிரச்சசினை அல்ல. அதை
வழக்குப் போடும்போது, தரவுகளின் அடிப்படையில்
வக்கீல்கள் முடிவு பண்ணுவார்கள். முதலில்
இந்தக் கோரிக்கை மக்களின் கோரிக்கையாக
மாற வேண்டும். இந்தக் கருத்து தமிழர்களிடம்
வேகமாகவும் பரவலாகவும் எடுத்துச் செல்லப்
பட வேண்டும்.இதுதான் முக்கியம்.

இப்படி வழக்குப் போடுவதன் மூலம், ஸ்டெர்லைட்
ஆலையை தமிழக அரசு மூடினால், அதை மீண்டும்
திறப்பது இயலாத காரியம் ஆகி விடும். எப்படியெனில்,
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது,
ஸ்டெர்லைட்டைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்காது.
 


    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக