வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

(1) ஆரியமும்  மாயை! திராவிடமும் மாயை! Feb 15
------------------------------------------------------------------------======
வரலாற்று ஆசிரியர்கள் மானுட வரலாற்றை
மூன்று கட்டங்களாகப் பிரிக்கிறார்கள். கிடைக்கப்பெற்ற
தொல்லியல் சான்றாதாரங்களின் அடிப்படையில்
இப்பகுப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

அ) கற்காலம் (stone age)
ஆ) வெண்கல யுகம் (bronze age)
இ) இரும்பு யுகம் (iron age)
ஆகிய மூன்று கட்டங்களை மானுட வரலாறு கடந்து
வந்துள்ளது. எவ்வித உலோகப் பயன்பாடு பற்றியும் அறியாத  மனிதன் கற்கருவிகளை மட்டுமே பயன்படுத்திய காலம்
கற்காலம் ஆகும்.  தோராயமாக இது 40 லட்சம் ஆண்டுகளுக்கு
முன்பு தொடங்கி பொ.ச.மு 2000 வரை நீடித்ததாகக்
கருதப்படுகிறது. 

வெண்கல யுகம் இரும்பு யுகம் ஆகிய இரண்டும் உலோக
யுகம் (metal age) எனப்படும். இவ்விரண்டில் வெண்கலமே
மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய உலோகம் ஆகும்.
உண்மையில் வெண்கலம் என்பது தனித்த ஓர் உலோகம்
அல்ல. அது இரண்டு உலோகங்களின் கலவை.
தாமிரத்துடன் தகரம், அலுமினியம் போன்ற 
பிறிதொரு தனிமத்தைக் குறிப்பிட்ட விகிதத்தில்
கலப்பதன் மூலம் வெண்கலம் கிடைக்கிறது. வெண்கலம்
கலப்பு உலோகம் (alloy) ஆகும். மனிதன் வெண்கலக்
கருவிகளைப் பயன்படுத்திய காலமே வெண்கல யுகம்
ஆகும். இது தோராயமாக பொ.ச.மு 3500 முதல் பொ.ச.மு
2000 வரையிலான காலம் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

இரும்பு யுகம் என்பது மனிதன் இரும்புக் கருவிகளைப்
பயன்படுத்திய காலம். இது தோராயமாக பொ.சமு
1300 முதல் பொ.ச.மு 500 வரையிலான காலம் ஆகும்.
----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக