ஒரு சுயமரியாதைத் திருமணம் நடந்த போது (1930) பெரியாரியரிடம் "ஒரு தாரமிருக்கிற பொழுது மறுதாரம் கட்டலாம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையா?' என்று கேள்வி கேட்கப்பட்டது. நடத்தி வைத்த திருமணம் அவ்வாறுதான் இருந்திருக்க வேண்டும்.
இதற்கு சுற்றி வளைத்து ஏதேதோ சொல்லி விட்டு பெரியார் கடைசியில் விஷயத்திற்கு வருகிறார்.
" கல்யாணம் என்பது ஒரு மனிதனுக்கு இன்பத்தைப் பொறுத்ததே தவிர வேறு ஒன்றுமில்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்து வராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் எந்தப் பிசகும் இல்லை. அதே உரிமையைப் பெண்ணுக்கு கொடுக்கவும் ஆண் தயாராக இருக்கிறார்."
ஆஹா, எவ்வளவு தெளிவாகப் பேசுகிறார் என்றுதானே நினைக்கத் தோன்றும்?
அவரே சொல்வது போல பூனைக்குட்டி கடைசியில் வெளியே வருகிறது!
"சமீபத்தில் நகர் என்ற இடத்தில் ஒரு சுயமரியாதைக் கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை கிறிஸ்தவர். கிறிஸ்துவ மதச் சட்டப்படி ஒரு மனைவியிருக்க மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்ள அனுமதியில்லை என்றாலும் அவரவர் சுதந்திரத்தை கட்டுப்படுத்தல் விரோதமாகும். எனவே அக்கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தோம். இங்கு நடைபெற்ற திருமணத்தின் தம்பதிகள் மிகச் சிறந்தவர்கள் என்பது என் கருத்து. தகுதி வாய்ந்த இத்தம்பதிகள் சிறந்து வாழ விரும்புகிறேன்"
குடிஅரசு 12. 10.1930
குடிஅரசு 12. 10.1930
எப்படியிருக்கிறது கதை?
பெரியாரின் கட்டளையை சிரம் மேல் தாங்கி தங்கள் சுதந்திரத்தை கட்டுப் படுத்தாமல், பல பெண்களைத் திருமணம் செய்த பகுத்தறிவுச் சிங்கங்கள் அலைந்து கொண்டிருந்தன என்பது வரலாறு.
இதுதான் உண்மையான சுயமரியாதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக