செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சற்றுமுன் நான்காவது கட்டுரை வெளியிடப்
பட்டு விட்டது.


RACE வேறு; ETHNIC GROUP வேறு. RACE என்பது ஒரு
குறிப்பிட்ட உயிரினத்தில் (SPECIES) உள்ள உட்பிரிவு.
ஹோமோசேப்பியன் என்ற உயிரினத்தில் வெள்ளையர்,
மஞ்சள் நிறத்தவர், கறுப்பர் என்ற இனங்கள்  (RACES)
உள்ளன. RACE என்பது உயிரியல் ரீதியானது
(BIOLOGY based). ஆனால் ETHNIC GROUP என்பது ஒரு
சமூகக் கட்டுமானம் (a social construct). பண்பாடு, மொழி,
புவியியல் சூழல் ஆகியவற்றின் காரணமாக
வெவேறு பிரதேசங்களில் வெவ்வேறு இனக்குழுக்கள்
உருவாயின.
சுருங்கக் கூறின்,
RACE= Biological construct.
ETHNICITY= Social construct.
   

kaalanirnayam

காலநிர்ணயம் என்பதை ஜீன்களின் ஆய்வு மூலம்
மட்டுமே செய்ய இயலாது. தொல்லியல், இலக்கியம்,
மொழியியல் இன்ன பிற சான்றுகளைக் கொண்டே
கால நிர்ணயத்தை அளவிட முடியும். population genetics,
archio genetics ஆகிய நவீனமான துறைகள் யாவுமே
தோராயமும் அனுமானமும் .நிறைந்தவை. ஜீன்களின்
ஆய்வில் மட்டுமே தோராயம் மிகக் குறைவு.

மரபினம் (race) என்பது அழியவில்லை. இன்றும்
இருக்கிறது. ஏன் மனிதர்கள் உயிரியல் ரீதியாக
மூன்று பிரிவுகளாக இருக்கிறார்கள்? பரிணாம
வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில், இயற்கைத்
தேர்வு மூலமோ, சூழலுக்குத் தகுந்தவாறு
தகவமைத்துக் கொள்வதன்
மூலமாகவோ மூன்று வேறுபட்ட மரபினங்கள்
(races) தோன்றின. உயிரியல் ரீதியாக மூன்று
வித இனங்கள் (races) இருக்கின்றன.
**
இந்த மூன்று இனங்களில் நிறம் என்பது மாறத்தக்கது.
அது புறக்காரணிகளைப் .பொறுத்தது. எனவே நிறத்தின்
அடிப்படையில் மட்டும் இந்தப் பாகுபாடு ஏற்படவில்லை
என்பதை கவனத்தில் கொள்ளவும்.

திரு பழனிதீபன் அவர்களுக்கு,
பிரபஞ்ச காலம் என்று திரு கமல் ;கூறவில்லை;
பிரபந்த காலம் என்றுதான் .கூறியுள்ளார்.
பிரபந்தங்கள் 96 .வகைப்படும். பிரபந்தம் என்பது
சிற்றிலக்கியங்களைக் குறிக்கும். பிரபஞ்சம்
என்பது பேரண்டத்தை (universe) குறிக்கும்.
சங்க காலம், சங்கம் மருவிய காலம், காப்பிய காலம்,
பக்தி இலக்கியக் காலம் ஆகிய காலங்களுக்குப்
பிற்பட்டதே பிரபந்த காலம். சுருங்கக் கூறின்,
நவீன இலக்கியக் காலத்திற்கு (தற்காலத்திற்கு)
சற்று முற்பட்டதே பிரபந்த காலம். 
  

அடிக்கடி தொலைக்காட்சியில் அவர்
"பிரபந்த காலம்  முதலே" என்று  சொல்வதை
ஒளிபரப்புகிறார்கள். அவருடைய வாயால் அவரே
சொன்னது என்பதால்தான் குறிப்பிட்டேன். நிற்க.
ஆரிய திராவிடப் பொய்மையை அம்பலப்படுத்தி
நான் எழுதிவரும் தொடர் கட்டுரைகளை படிக்குமாறு
அருள் கூர்ந்து  வேண்டுகிறேன்.

இந்தியாவுக்குள் வருவதென்றால், இந்த மலைகளைக்
கடந்துதான் வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக