வெள்ளி, 17 ஜூன், 2016

கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகங்களில்
ரகோத்தமனின் புத்தகமும் ஒன்று. அதில் உள்ள
தகவல்கள் எல்லாம் தடா நீதிமன்றத்தின்
தீர்ப்பில் இருந்தும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில்
இருந்தும் எடுக்கப் பட்ட தகவல்களே. திரு ரகோத்தமன்
அதில் 80 சதவீதம் உண்மையை 20 சதவீதம் பொய்யுடன்
கலந்து கூறுவார். அந்தப் பொய்களை எங்களை
போன்றவர்களால் மட்டுமே கண்டு பிடிக்க இயலும்.
மற்றப்படி அது பெருமளவுக்கு நல்ல புத்தகமே.
**
பொய்க்கு உதாரணம்:
குண்டு சாந்தன் எனப்படும் திருச்சி சாந்தனை
ஒரு வீட்டில் சுற்றி வளைக்கிறது சி.பி.ஐ. சாந்தன்
சயனைடு குப்பியை சட்டைப் பையில் இருந்து எடுக்க
முயற்சி செய்கிறார். அதற்குள் சி.பி.ஐ அதிகாரிகள்
அவரைச் சுட்டுக் கொன்று விடுகின்றனர். இதுதான்
நடந்த உண்மை.
**
இதை ரகோத்தமன் பின்வருமாறு மாற்றி
எழுதியிருப்பார். சயனைடு சாப்பிட்டுத் துடிதுடித்து
இறந்து போனார் சாந்தன் என்று எழுதி இருப்பார்.
மற்றப்படி, அவரின் புத்தகம் நிறையத் தகவல்களைக்
கூறும் புத்தகம். அவை பெரும்பாலும் உண்மையே.
**
நளினியும் முருகனும் திருமணமே செய்து கொள்ளவில்லை.
போலீஸ் பிடிக்கும்போது நளினி கர்ப்பம். என்றாலும்
நளினி திருமணம் ஆனவர் என்றே ரகோத்தமன் எழுதி இருப்பார். காரணம், நளினியின் சாட்சியம் மீது  நம்பகத்தன்மை
வர வேண்டும் என்று.
**
திருச்சி சாந்தன் ஒரு தி.க.காரரின் மனைவியுடன்
படுத்திருந்தபோதுதான் பிடிபட்டார். இருந்தாலும்
ரகோத்தமன் அந்தப் பெண் பற்றிய செய்திகளை
தான் புத்தகத்தில் எழுதவில்லை. அவர் ஒரு ஜெட்டில்மென்.
**
இதை வெளியிட வேண்டாம், தயவு செய்து. எந்தப்
புத்தகத்திலும் எழுதப்பட்ட தகவல்களை அதிகமான
தகவல்களை நாங்கள் அறிவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக