காரல் மார்க்ஸ் ஆர்.எஸ்.எஸ்.சை ஆதரித்தார்!
போலிப் பகுத்தறிவு மூடர்களின் உளறல்கள்!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
மார்க்சிய மூல ஆசான் காரல் மார்க்ஸ் இந்தியாவைப்
பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். அன்று லண்டன்
நூலகங்களில் இந்தியா பற்றி நிறையப் புத்தகங்கள்
இருந்தன. அவை அனைத்தும் ஆங்கிலேயே
ஆசிரியர்கள் எழுதியவை.
அடிமைப்பட்ட நாட்டைப் பற்றி
அடிமைப் படுத்திய ஆதிக்கவாதிகள் எழுதியவை.
அவை நம்பகத்தன்மை இல்லாதவை என்று கருதிய
மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிய மூல நூல்களைக்
கற்க விரும்பினார். அவை கிடைத்தன. ஆனால் அவை
யாவும் மார்க்சுக்குத் தெரியாத மொழியில், சமஸ்கிருதத்தில் இருந்தன.
எனவே அந்த நூல்களைப் படிக்கும் பொருட்டு மார்க்ஸ் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். இவ்வாறு மார்க்ஸ் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கியபோது தமது அந்திம
காலத்தில் இருந்தார்.கற்று முடிக்கும் முன்னரே
மார்க்ஸ் காலமாகி விட்டார்.
நம்மூர் போலிப் பகுத்தறிவு மூடர்களுக்கு மார்க்ஸ்
பற்றி எதுவும் தெரியாது. மார்க்ஸ் பற்றி மட்டுமல்ல
எதைப் பற்றியும் ஒரு இழவும் தெரியாத மூடர்கள்
அவர்கள். தெரிந்திருந்தால் மார்க்ஸ் ஒரு ஆர்.எஸ்.எஸ்.
அபிமானி என்று சொல்ல ஆரம்பித்து இருப்பார்கள்.
சமஸ்கிருதத்தின் சக்கரவர்த்தி யார் என்றால் அவர்
மறைமலை அடிகள்தான். அதே போல் சமஸ்கிருதத்தைச்
சம்ஹாரம் செய்தவர் யார் என்றால் அவரும் மறைமலை
அடிகள்தான். இது எப்படி என்று வாசகர்கள்
கேட்கிறார்கள். அடுத்த கட்டுரையில் அதுபற்றிப்
பார்ப்போம். அதுபற்றிப் பார்க்க வேண்டும் என்றால்
சமஸ்கிருத மொழியின் இலக்கணம் கொஞ்சமாவது
தெரிந்திருக்க வேண்டும்.
ஏற்கனவே கொடுத்திருந்த ஒரு பாடலுக்கு இங்கு
விளக்கம் தந்திருக்கிறோம். படியுங்கள்.
அக்ரே வஹ்னி ப்ருஷ்டே பானு
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு
கர தல பிச்சஸ் தருதல வாஸஸ்
ததபி ந முஞ்சத் ஆஷா பாஷ!
(ஆதி சங்கரரின் பஜ கோவிந்தத்தில் உள்ள பாடல்)
பொழிப்புரை:
-------------------------
தனக்கு முன்னே நெருப்பு மூட்டுகிறான் அக்கினியை வணங்க.
இவனுக்குப் பின்புறம் சூரியன் சுட்டெரிக்கிறான். ஆக
இவனுக்கு முன்னும் நெருப்பு; பின்னும் நெருப்பு.
இரவில் குளிர் இவனை வருத்துகிறது. முகவாய்க் கட்டையை
முழங்காலுக்குள் கொடுத்து உடம்பைச் சுருக்கிக் கொண்டு
குளிரில் விறைக்கிறான்.
கையேந்திப் பிச்சை எடுத்து உண்ணுகிறான்.
இரவில் மரத்தடியில் உறங்குகிறான்.
என்றாலும் இவனும் ஆசைகளைத் துறக்க முடியாமல்
தவிக்கிறான்.
விளக்கவுரை:
---------------------------
சுபுக ஸமர்ப்பித ஜானு என்கிறார் ஆதி சங்கரர்.
கிட்டத்தட்ட இது போன்றதொரு வர்ணனையை
சக்தி முற்றப் புலவரின் நாரை விடுதூது பாடலில்
காண முடியும். பொருள் தேடுவதற்காய் வடபுலம்
சென்று வறுமையில் வாடும் சக்திமுற்றப் புலவர்
தன் மனைவிக்கு நாரையைத் தூது அனுப்புவார்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
என்று தொடங்கும் அப்பாடலில்,
"கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே "
என்ற அடிகளில் சக்திமுற்றப் புலவரும்
ஸுபுக ஸமர்ப்பித ஜானு என்பதைத்தானே
கூறுகிறார்.
பதவுரை:
--------------------
அக்ரே= முன்னால்
வஹ்னி =நெருப்பு
ப்ருஷ்டே =பின்னால் (பிருஷ்டம்=பின்புறம்)
பானு= சூரியன்
ராத்ரௌ =இரவு நேரத்தில்
சுபுக ஸமர்ப்பித ஜானு= முகவாய்க் கட்டையை
முழங்காலுக்குள் புதைத்தல்.
கர தல = கைத்தலத்தில், கையில்
பிச்சஸ் =பிச்சை
தரு தல = மரத்தடி
வாசஸ் = வாசம் செய்கிறான், வசிக்கிறான்
ததபி ந முஞ்சத் = என்றாலும்
ஆஷா பாஷ = ஆசாபாசங்கள்.
-----------------------------------------------------------------------------------------------
தொடரும்
முந்திய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறோம்.
***********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக