வெள்ளி, 24 ஜூன், 2016

குட்டி முதலாளித்துவப் பேராசிரியர் கைது!
கர்நாடக காங்கிரஸ் முதல்வர் நடவடிக்கை!
தென்னை மரத்தில் தேள் கொட்டினால்
புன்னை மரத்தில் நெறி கட்டிய கதை!
-----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் உள்ள
மைசூர் பல்கலையில் இதழியல் பேராசிரியராகப்
பணியாற்றி வருபவர் திரு. மகேஷ் குரு. இவர் பட்டியல்
இனத்தவர். இவர் ஒரு குட்டி முதலாளித்துவப்
பேராசிரியர்.

 ஒரு கருத்தரங்கில் பேசிய இவர் பிரதமர் மோடி,
மத்தியக் கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானி
ஆகியோரைத்  தாக்கிப் பேசியுள்ளார். அத்தோடு
இதிகாச நாயகன் ராமனையும் தாக்கிப் பேசியுள்ளார்.

இவரது ஆட்சேபிக்கத்தக்க பேச்சு குறித்து, ஒரு சில
அமைப்புகள் தெரிவித்த புகாரின் பேரில் இவர் கைது
செய்யப்பட்டு, பிணை கிடைக்காமல், சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.

மோடியை இவர் தாக்கிப் பேசுகிறார். உடனே காங்கிரஸ்
முதல்வர் சீத்தாராமைய்யாவுக்கு கோபம் வருகிறது.
சிறையில் அடைத்து விடுகிறார்.

பேராசிரியர் ஜாமீன் கேட்கும்போது, அரசு வழக்கறிஞர்
ஆட்சேபம் இல்லை என்று சொன்னால் போதும்.
பேராசிரியருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடும்.

ஆனால் காங்கிரஸ் முதல்வர் சித்த ராமைய்யா அப்படி
நினைக்கவில்லை. மோடியைத் தாக்கினால் நமக்கு
என்ன என்று அவர் கருதவில்லை. குறுகிய நோக்கம்
அவருக்கு இல்லை. Mr Siddha Ramayaa is not sectarian minded.

இதிகாச ராமனைத் தாக்கிப் பேசினால்
சித்தராமைய்யாவுக்கு என்ன வந்தது?  மேலும்
சித்தராமையா ஒரு பகுத்தறிவாளராமே! ஒருவேளை
தமிழ்நாட்டில் மண்டிக் கிடைக்கும் போலிப்
பகுத்தறிவாளர் போல இவரும் ஒரு போலியோ?

இது போன்ற செய்தி தமிழ்நாட்டில் எந்த ஒரு
மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்தாது. ஏனெனில்
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவை விமர்சித்ததற்காக
அன்றாடம் ஒரு அவதூறு வழக்கு பதிவாகிக்
கொண்டு இருக்கிறது. இதைக் கண்டித்து எந்த
முற்போக்கு நாயும் குறைப்பதில்லை.

மோடியை ஒருவர் விமர்சித்தால் சித்தராமைய்யாவுக்கு
ஏன் வீங்க வேண்டும்? தென்னை மரத்தில் தேள்
கொட்டினால், புன்னை மரத்துக்கு ஏன் நெறி
கட்ட வேண்டும்? இதுதான் ஆளும் வர்க்க ஐக்கியமோ!

அப்படியானால், இந்த முறையற்ற கைதுக்காக
சித்த ராமய்யாவை கண்டிக்கா மல், உண்மையைத்
திரித்து கைதுக்கு கண்டனம் என்று மட்டும்
அறிக்கை வெளியிடுபவர்கள் யார்? கைது செய்தவரைப்
பட்டுத் துணியால் மறைக்கும் அந்தக் கயவர்கள்
யார்? அவர்கள்தான் ஆளும் வர்க்கக் கைக்கூலிகளோ?
-------------------------------------------------------------------------------------------------
ராமன் தன் மனைவி சீதையைக் கடிந்து கொண்டான்
என்பது ராமாயணம் கற்ற (அல்லது கதை கேட்ட)
அனைவருக்கும் தெரியும்.  இது குறித்து கம்பன்
கூறுவது என்ன என்பதை அடுத்த கட்டுரையில்
படிக்கலாம்.
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக