தமிழ்நாட்டில் இருந்தது போலி நாத்திகம் என்ற
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கருத்தை
கவிஞர் வைரமுத்து ஏற்றுக் கொண்டுள்ளார்!
வைரமுத்துவின் கட்டுரையில் ஆதாரம் பாரீர்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
கடந்த நூற்றாண்டில் (1901-2000) தமிழ்நாட்டில்
நாத்திக இயக்கங்கள் என்று உரிமை கோரிய
அமைப்புகள் எதுவும் மெய்யான நாத்திகத்தைப்
பரப்பவில்லை என்பது நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் ஆணித்தரமான கருத்து. இந்தக்
கருத்தைக் கடந்த 15 ஆண்டுகளுக்கும்
மேலாக, வாய்ப்புக்கு கிடைக்கும் இடங்களில்
எல்லாம் நியூட்டன் அறிவியல் மன்றம் சொல்லி
வந்திருக்கிறது என்பதை வாசகர்கள் அறிவார்கள்.
தற்போது நாத்திகராக கவிஞர் வைரமுத்து அவர்கள்
யாம் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அவர் எழுதிய ஒரு கட்டுரையில் இந்த உண்மையைக்
குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாளை
ஒட்டி வைரமுத்து அவர்கள் எழுதிய கட்டுரையில்
இக்கருத்தைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"கடவுள் மறுப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானம். அது அறிவியல்
என்ற ஆழத்திலிருந்து கட்டி எழுப்பப்படாமல் பிராமண
எதிர்ப்பு என்ற பீடத்திலிருந்து கட்டமைக்கப்
பட்டு விட்டதாகக் கருதப் பட்டு விட்டதோ என்று
பொருள்முதல்வாதம் என்ற அறிவியலின் அடிப்படையில்
தமிழ்நாட்டில் பெரியாரிய நாத்திகம் கட்டி எழுப்பப்
படவில்லை என்கிறார் வைரமுத்து, இந்த உண்மையை
யாம்தான் முதலில் கூறினோம்; நிறுவினோம்.
பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்றே தெரியாத
ஒரு மூடர் கூட்டம்தான் தங்களை நாத்திகர்கள்
என்று உரிமை கோருகிறது. இதை ஏற்பதற்கில்லை.
கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி,
விடுதலை ராசேந்திரன் இன்ன பிறர் பங்கேற்றுள்ள
நாத்திக அமைப்புகள் யாவும் போலி நாத்திக
அமைப்புகளே.
போலி நாத்திகனை விட, மயிலாப்பூர் சவுண்டிப்
பார்ப்பான் எவ்வளவோ மேலான பொருள்முதல்வாதி
என்ற தலைப்பில் அண்மையில் யாம் ஒரு கட்டுரை
எழுதி இருந்தோம். அதை வாசகர்கள் நினைவு கூர்க.
அண்மைக்கால வரலாற்றில் நியூட்டன் அறிவியல் மன்றம்
மட்டுமே தமிழ்நாட்டின் முதல், முழுமுதல் நாத்திக
அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எமது அமைப்பின்
கொள்கை அறிவியல் பொருள்முதல்வாதம் ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------------
கவிஞர் வைரமுத்து எழுதிய வாசகங்களுக்கு ஆதாரம்:
வைரமுத்து அவர்கள் தினமணியில் எழுதிய நடுப்பக்கக்
கட்டுரை தேதி: 24.06.2016
இதை முதல் கமென்ட்டில் பார்க்கவும்.
****************************************************************************************************

கவலையோடு எண்ணத் தோன்றுகிறது."

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக