திங்கள், 13 ஜூன், 2016

பேரறிவாளனுக்கு மூன்று மாதம் மட்டுமே சிறை!
பேரறிவாளனுக்கு மரண தண்டனை! எது உண்மை?
--------------------------------------------------------------------------------------------
பூந்தமல்லி தடா நீதிமன்றம் 1997 ஜனவரியில் வழங்கிய
தீர்ப்பில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை
வழங்கியது என்பது தெரிந்ததே. அதே தீர்ப்பில்
பேரறிவாளனுக்கு மூன்று மாத சிறைத் தண்டனையும்
வழங்கப்பட்டது என்பது பலரும் அறியாத செய்தியே.
இது எப்படி என்பதைப் பார்ப்போம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேர் மீதும் பல்வேறு
பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு இருந்தது.

1)இந்திய பாஸ்போர்ட் சட்டம்
2) ஆயுதச் சட்டம் (Arms act)
3) வெடிபொருட்கள் சட்டம் ( explosive substances act)
4) இந்திய வயர்லெஸ் சட்டம்
5) வெளிநாட்டினர் சட்டம் (Foreigners act)
உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் சட்டங்களின் கீழும்,

குற்றமுறு சதி (பிரிவு 120B, IPC) மற்றும் கொலை (302 IPC)
ஆகிய பிரிவுகளிலும் வழக்குத் தொடரப் பட்டு
இருந்தது. இவை தவிர தடா சட்டத்தின் கீழும்
வழக்குத் தொடரப் பட்டிருந்தது.

இதில் பாஸ்போர்ட் இல்லாமல் கள்ளத்தனமாக
இலங்கைக்குச் சென்றார் என்பதாலும், இச்செயல்
இந்திய பாஸ்போர்ட் சட்டத்தை மீறியது என்பதாலும்
நீதியரசர் இந்தக் குற்றத்திற்காக மூன்று மாதம்
தண்டனை விதித்தார்.

பேரறிவாளன் மீதான குற்றங்களில் பல, மத்திய
அரசின் சட்டங்களான  பாஸ்போர்ட் சட்டம், வயர்லஸ்
சட்டம், வெளிநாட்டினர் சட்டம் போன்ற
மத்திய அரசின் சட்டங்களின் கீழ் வருவதால்,
அவரை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை
என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
*****  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக